சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது: அமித்ஷா

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்காது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்! 

Last Updated : Dec 20, 2018, 08:52 AM IST
சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது: அமித்ஷா title=

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்காது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்! 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. 5 மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும், மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. ஐந்து மாநிலங்களின் தேர்தலில் போட்டியிட்ட BJP ஐந்து மாநிலங்களிலும் தில்வியை தழுவியது. 

இதை தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்பதாகவும், ஆனால், அது மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்காது எனவும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 8 கோடி குடும்பத்துக்கு கழிப்பறைகளும், இரண்டரைக் கோடி வீடுகளுக்கு மின் இணைப்பும் வழங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமது பலத்தை நம்பியே களமிறங்குவதாகவும், அடுத்தவரின் பலவீனத்தை நம்பியல்ல எனவும் தெரவித்துள்ளார். கடந்த 2014-ல் போட்டியிட்ட போது அனைவருக்கும் எதிராகவும் பாஜக போரிட்டதாகவும் தற்போது தங்களுக்கு எதிராக அனைவரும் அணி சேர்ந்துள்ளதாகக் கூறினார். எதிர்கட்சிகளின் மஹாகத்பந்தன் என்பது மாயை எனவும் அவர் கூறினார்.

 

Trending News