சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா....டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு மணீஷ் சிசோடியா வசம்

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jun 18, 2020, 10:57 AM IST
சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா....டெல்லி சுகாதாரத்துறை பொறுப்பு மணீஷ் சிசோடியா வசம் title=

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது பொறுப்புகள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேதனை முடிவு புதன்கிழமை (ஜூன் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

உயர் தர காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவ்வாய்க்கிழமை காலை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது. பின்னர் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

READ | டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானது...

 

அதிக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக ஜெயின் தற்போது ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஜூன் 15 இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முந்தைய நாள், ஆம் ஆத்மி கட்சி (AAP) MLA அதிஷியும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியானது. டெல்லியின் கல்காஜியைச் சேர்ந்த ஆம் ஆத்மி MLA தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு நெறிமுறையைப் பின்பற்றி வருகிறார்.

 

READ | டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானது...

 

இதையடுத்து சத்யேந்திர ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending News