புது டெல்லி: கிழக்கு டெல்லி இரண்டு இரங்களில் மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த இராணுவத்தை அழைக்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். காவல்துறையினரின் அனைத்து முயற்சிகளையும் மீறி, மீண்டும் வன்முறை வெடிக்கிறது. அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தந்து ட்விட்டர் பக்கத்தில் "நான் அனைவரின் தொடர்பில் இருக்கிறேன். எழுதுவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். நிலைமை ஆபத்தானது. டெல்லி காவல்துறையின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களால் முடியவில்லை.
உடனடியாக இந்திய ராணுவத்தை அழைக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
I have been in touch wid large no of people whole nite. Situation alarming. Police, despite all its efforts, unable to control situation and instil confidence
Army shud be called in and curfew imposed in rest of affected areas immediately
Am writing to Hon’ble HM to this effect
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020
ஆனால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சிவில் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே இராணுவத்தை அழைக்க முடியும். எவ்வாறாயினும், முதலமைச்சர் கெஜ்ரிவால் ராணுவத்தை அழைக்க முடியாது. ஏனெனில் தேசிய தலைநகரம் ஒரு சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகும். காவல்துறை மற்றும் பொது சட்ட ஒழுங்கு துறை மத்திய அரசின் கீழ் வருகிறது.
எவ்வாறாயினும், முதலமைச்சர் கெஜ்ரிவால், கடந்த சில நாட்களாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார். அவர் அமைதியாக இருப்பதை விட வன்முறையை கட்டுப்படுத்த தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்திருக்க வேண்டும் என்ற கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இன்று அதிகாலையில், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்களும் அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் உடனடியாக உள்ளே நுழைவதை தடுக்க, அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.