நிதி இழப்பை சந்தித்து வரும் ஏர் இந்தியா, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து 3ஆவது மாதமாக, சம்பளம் வழங்கப்படுவது தாமதமாகி வருகிறது.
ஏர் இந்தியா நிதி இழப்பை சந்தித்து வருகிறது. அதன், ஐந்து துணை நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்க, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. ஆனால், கடந்த மே மாதம் 31ம் தேதி வரையிலும், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்குவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் நிதி இல்லாதால் கடந்த மே மாத சம்பளத்தினை ஏர்இந்தியா ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு மாதந்தோறும் 30 அல்லது 31ஆம் தேதிகளில் அந்த மாதத்துக்கான சம்பளம் அளித்துவிடும். ஆனால் நிதி இல்லாதால் கடந்த 3 மாதங்களாக சம்பளம் அளிக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.