Aircel-Maxiscase: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆக.,7 வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்!!

Last Updated : Jul 10, 2018, 11:49 AM IST
Aircel-Maxiscase: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆக.,7 வரை தடை title=

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்!!

கடந்த 2006 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தை ஜூன் 10 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10 நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்துள்ளது!

 

Trending News