அமர்நாத் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்

Last Updated : Jul 11, 2017, 10:06 AM IST
அமர்நாத் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்  title=

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையில், இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பயணித்த 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமர்நாத் தாக்குதல் குறித்து ராஜ்நாத் தலைமையில், இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலர், உளவுத்துறையான ‛ரா' பிரிவு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். 

Trending News