NRC விவகாரத்தில் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசு மீது கடுமையான தாக்கு!

மம்தா பானர்ஜியை தேற்கடிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் கொல்கத்தாவில் அமித்ஷா-வின் அனல் பறக்கும் பிரச்சாரம்! 

Last Updated : Aug 11, 2018, 05:21 PM IST
NRC விவகாரத்தில் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசு மீது கடுமையான தாக்கு!  title=

மம்தா பானர்ஜியை தேற்கடிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் கொல்கத்தாவில் அமித்ஷா-வின் அனல் பறக்கும் பிரச்சாரம்! 

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக-வின் சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடை பெற்றது. அப்போது பிரட்சரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. அவருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க அம்மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமூல் காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகியுள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்தப் பேரணிக்கு முதலில் கொல்கத்தா போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்று அம்மாநில பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், பேரணி நடைபெற உள்ள இடத்தில் ‘மேற்கு வங்கத்துக்கு எதிரான பாஜக திரும்பி செல்’ என்ற எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ள பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று மாநில தழுவிய அளவில், ‘அசாம் குடிமக்கள் பதிவேடு’-க்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது திரிணாமூல். 
 
இதையடுத்து, மக்களிடையே பேசிய அமித்ஷா, மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தில் வீழ்த்தவே நாங்கள் இங்கு வருகை தந்துள்ளோம். சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவே தேசிய மக்கள் பதிவேடு நடைமுறை கையாளப்படுகிறது. நாடு என்று வரும் போது வாக்கு வங்கி அரசியல் முக்கியம் இல்லை. உங்களால் முடிந்தவரை எதிர்த்துக்கொண்டு இருங்கள். ஆனால் ஒருபோது தேசிய மக்கள் பதிவேடு நடைமுறைகளை ஒருபோதும் கைவிட மாட்டோம். 

எங்கள் பேரணியை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்க்க கூடாது என்பதற்காக பெங்காலி தொலைகாட்சி சேனல்களின் சிக்னல்கள் தரம் குறைக்கப்பட்டுள்ளது. எங்களின் குரலை நீங்கள் ஒடுக்க நினைத்தாலும், நாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவோம். மேற்கு வங்காளத்தில் முன்பு ரபீந்தர சங்கீதங்களை ஒவ்வொரு நாளும் கேட்க முடிந்தது. 

தற்போது வெடிகுண்டுகளின் சத்தத்தை மட்டுமே நம்மால் இங்கு கேட்க முடிகிறது. வங்காளதேச ஊடுருவல்காரர்களை  பாதுகாக்க மம்தா பானர்ஜி ஏன்  நினைக்கிறார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வரையறுக்கவில்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறார் என மம்தா பானர்ஜி அரசு மீது கடுமையாக தாக்கியுள்ளார்! 

 

Trending News