ரஃபேல் விமான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரச்சாரம் செய்த எதிர்கட்சியினருக்கு சரியான பதிலடி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மறைகேடு இல்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு டிச.,14 ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். ரஃபேல் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறையிடப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி ஒத்திவைத்தனர். 6 மாதங்களுக்கு பின்னர் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ரஃபேல் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என கூறியுள்ள நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக FIR பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர். இதன் மூலம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். முடிவெடுப்பதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்; மோடி அரசு ஊழல் இல்லா வெளிப்படையான அரசு என்பதை ரஃபேல் தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது. ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி என தெரிவித்துள்ளார். இதுகுயர்த்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " #ரஃபேல் மீதான மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு, தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரங்களை நம்பியிருக்கும் தலைவர்கள் மற்றும் எதிர் கட்சிகளுக்கு பொருத்தமான பதில்.
இன்றைய முடிவு, மீண்டும், மோடி சர்க்காரின் நற்சான்றிதழ்களை வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத ஒரு அரசாங்கமாக மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Supreme Court’s decision to dismiss the review petition on #Rafale is a befitting reply to those leaders and parties who rely on malicious and baseless campaigns.
Today’s decision, yet again, reaffirms Modi sarkar’s credentials as a govt which is transparent and corruption free.
— Amit Shah (@AmitShah) November 14, 2019
மேலும், இப்போது, # ரஃபேல் தொடர்பாக பாராளுமன்றத்தை சீர்குலைப்பது ஒரு மோசடி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நேரம் மக்களின் நலனுக்காக சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
எஸ்சி, காங்கிரஸ் மற்றும் அதன் தலைவரின் இன்றைய கண்டிப்புக்குப் பிறகு, அரசியல் தேசிய நலனுக்கு மேலானது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
Now, it has been proved that disruption of Parliament over #Rafale was a sham. The time could have been better utilised for the welfare of people.
After today's rebuke from SC, Congress and its leader, for whom politics is above national interest must apologise to the nation.
— Amit Shah (@AmitShah) November 14, 2019
ரபேல் விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. உண்மைக்கு இடையூறுகள் இருக்கும் எனவும் ஆனால் தோற்கடிக்கப்படாது எனவும் கூறியுள்ள பாஜக, மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது எனவும் தெரிவித்துள்ளது.