மோடி அமைச்சரவையில் அமித் ஷா; நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்

மோடி அமைச்சரவையில் இடம் பெரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா

Last Updated : May 30, 2019, 05:25 PM IST
மோடி அமைச்சரவையில் அமித் ஷா; நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் title=

புது டெல்லி: நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி, இன்று இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக செயல்பட்டு வந்த அருண் ஜெட்லி, கடந்த ஒன்றை வருடமாக  கடுமையான உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, "தனது உடல்நிலையை காரணம் காட்டி, தற்போது அமையுள்ள மோடி அமைச்சரவையில் தன்னால் இடம் பெற்று கடமைகளை ஆற்ற இயலாது" எனக் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனைதொடர்ந்து, மோடி அமைச்சரவையில் அடுத்த நிதி அமைச்சர் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நிதி அமைச்சர் என்பது மிக முக்கிய பொறுப்பு என்பதால், தனக்கு மிகவும் நெருங்கியவர்களையே அந்த பதவியில் அமர வைப்பார் மோடி. அருண் ஜெட்லி மோடியின் மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் படி, இன்று பதவியேற்க்க உள்ள மோடி அமைச்சரவையில், நிதி அமைச்சர் பதவி மோதியின் மிக நெருங்கிய நண்பர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News