இந்தியாவின் முதல் மெய்நிகர் பேரணி; இன்று துவங்குகிறார் அமித் ஷா...

கொரோனாவின் இந்த சகாப்தத்தில், முதல்முறையாக அரசியல் கட்சி ஒன்று, விர்ச்சுவல் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.

Updated: Jun 7, 2020, 11:54 AM IST
இந்தியாவின் முதல் மெய்நிகர் பேரணி; இன்று துவங்குகிறார் அமித் ஷா...

கொரோனாவின் இந்த சகாப்தத்தில், முதல்முறையாக அரசியல் கட்சி ஒன்று, விர்ச்சுவல் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.

கொரோனாவின் இந்த நெருக்கடிக் காலத்தில் பேரணிகள் ஏதும் நடத்துவது சாத்தியமில்லை. தலைவர்கள் பெரிய மேடையில் நின்று உரையாற்ற முடியாது, அவர்களின் உரையை கேட்க பெரிய அளவிலான கூட்டமும் கூட முடியாது. அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்டுப்பாடுகளும், தடைகளும் தொடர்கின்றன. ஆனால், தொழில்நுட்பங்களையும், நவீன உத்திகளையும் சரியான முறையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் கட்சி என்று பெயர் பெற்ற பாஜக, பேரணியை விர்சுவல் முறையில் நடத்துகிறது. கொரோனாவின் இந்த சகாப்தத்தில் முதல்முறையாக, அரசியல் கட்சி ஒன்று, விர்ச்சுவல் பேரணியை நடத்தப் போகிறது.

ஆயுத படை கேண்டீன்களில் இனி உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும்!...

இந்த முன்மாதிரி பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று  டெல்லியில் இருந்து துவங்கி வைக்கிறார். டெல்லியில் இருந்து அவர் பீகார் மக்களிடையே விர்சுவல் பேரணி மூலம் உரையாற்றவுள்ளார். இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  எனவே, அமித் ஷாவின் இந்த பேரணி தேர்தல் யுத்தத்திற்கான தொடக்கப் பேரணியாகப் பார்க்கப்படுகிறது.

பீகாரில் பாஜக இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறது. பாஜகவின் கட்சி அலுவலகத்தின் எல்லா இடங்களிலும் கொடிகளும், பதாகைகளும் நிறுவப்பட்டுள்ளன... பீகாரில் தேர்தலுக்கான சங்கு முழக்கம் இன்று தொடங்குகிறது.

  • அமித் ஷாவின் பீகார் மெய்நிகர் பேரணி மாலை 4 மணி முதல் டிஜிட்டல் மேடையில் தொடங்கும்.
  • இந்த மெய்நிகர் பேரணியை யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் மூலம் நேரடியாகக் காணலாம்.
  • மொபைல், கணினி மற்றும் LED திரைகளில் மெய்நிகர் பேரணியை மக்கள் நேரடியாகப் பார்க்க முடியும்.
  • சுமார் இரண்டு லட்சம் பாஜக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இந்த மெய்நிகர் பேரணியில் கலந்துக் கொண்டு உரையைக் கேட்பார்கள் என்று கூறப்படுகிறது.
  • பீகாரில் 72 ஆயிரம் சாவடிகளில் இந்த மெய்நிகர் பேரணியின் நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • அமித் ஷா நேரலையில் பேசுவதைக் கேட்பதற்காக, வாக்கு சாவடிக்கு தலா ஒன்று என மொத்தம் 72 ஆயிரம் LED திரைகள் நிறுவப்பட்டுள்ளன.
  • ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் கலந்துக் கொள்வதற்காக, வெவ்வேறு இடங்களில் LED திரைகள் நிறுவப்பட்டுள்ளன.
  • 45 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 547 சக்தி மையங்களில் அமித் ஷாவின் உரையை மக்கள் கேட்பார்கள்.
  • இவற்றைத் தவிர, பாஜகவின் ஆயிரத்து 99 மண்டலங்களில் உள்ள கட்சித் தொண்டர்களும் ஷாவின் உரையைக் கேட்பார்கள்.

இந்த புதுவிதமான பேரணிக்கு தேவையான உத்திகளை செயல்படுத்துவதற்காக, பீகார் மாநில பாஜக பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான பி.எல்.சந்தோஷ் ஏற்கனவே பாட்னாவிற்கு சென்றுவிட்டார். அவர்,  வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைவர்களுடன் பேசினர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விரைந்து அழைத்துக்கொள்ளுங்கள் -மத்திய அரசு!...

”லாக்டவுன் இன்னும் நீடிக்கிறது ... இனிமேலும் யாரும் கூட்டமாக கூட முடியாது... எனவே டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்... இன்று அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. தொலைபேசி உள்ளது… பீகாரில் 12 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், 9 கோடி மொபைல் போன்கள் உள்ளன… இவர்களுக்கு பேஸ்புக், ட்விட்டர் என சோஷியல் மீடியாவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியும், எனவே டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவோம்… இது புதிய முயற்சிகளுக்கான நேரம்” என்று பட்னாவில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.   

பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் இந்த மெய்நிகர்  பேரணிக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, தேர்தல் களை கட்டிவிட்டது. கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் விதிமுறைகளை பின்பற்றி இந்த பேரணி நடத்த வேண்டும் என்பதற்காக, தெளிவான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பாஜக அலுவலகத்தில் இருக்கும்  தலைவர்களும், தொண்டர்களும் இதைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் இல்லாமல் யாரும் வரக்கூடாது என்று சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதற்காக வெள்ளை நிற வட்டங்களும் இடைவெளி விட்டு, போடப்பட்டுள்ளன.  

”முகக்கவசம் அணியாமல் யாரும் அலுவலகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது ... சமூக விலகலுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன ... எல்லா இடங்களிலும் வட்டங்கள் போடப்பட்டு, இங்கு வருபவர் தனிநபர் இடைவெளியை பராமரிக்க   வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று பாஜக தலையமகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அமித் ஷாவின் மெய்நிகர் பேரணியை வெற்றிபெறச் செய்வதற்காக, பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொழில்நுட்ப குழு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் அனைத்து வளங்களுடனும், ஷாவின் மெய்நிகர் பேரணி சுமூகமாக நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளுடன்   இந்த குழுக் தயாராக உள்ளது. இதுபோன்ற மெய்நிகர் பேரை, பீகாரில் மட்டுமல்ல, நாட்டின் முதல் மெய்நிகர் பேரணி என்று இந்த தொழில்நுட்பக் குழு கூறுகிறது.

நிசர்கா சூறாவளி குறித்து அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தினார் ஷா!...

ரோனாவின் நெருக்கடியில் உள்ள மக்களுக்காக மத்தியில் உள்ள மோடி அரசாங்கமும் பீகாரின் என்டிஏ அரசாங்கமும் என்ன செய்தன என்பதை அமித் ஷா தனது முதல் மெய்நிகர் பேரணியின் மூலம் கூறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் இரண்டாவது இன்னிங்சின் முதலாண்டு நிறைவடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஷா ஓராண்டு ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிடுவார் என்றும் கூறப்படுகிறது இந்த பேரணியின் முக்கியமான நோக்கம் இது என்றாலும், உண்மையான இலக்கு அடுத்த நான்கு-ஐந்து மாதங்களில் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும். 

மொழியாக்கம் : மாலதி தமிழ்ச்செல்வன்