முழக்கங்களுடன் வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!

வழக்கமான உற்சாக முழக்கங்களுடன் வாகா எல்லையில், கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!

Last Updated : Jan 26, 2018, 08:27 PM IST
முழக்கங்களுடன் வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது! title=

வழக்கமான உற்சாக முழக்கங்களுடன் வாகா எல்லையில், கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!

இந்நியா தனது 69-வது குடியரசு தினத்தினை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லை வழக்கத்தை விட, அதிக உற்சாகத்தில் மூழ்கியது. 

இந்தியாவில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகையில் பாகிஸ்தானுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம், ஆனால் இன்று பாகிஸ்தான் வீரர்களோடு இனிப்புகள் பரிமாறப்படவில்லை. 

எல்லையில் பாகிஸ்தான்  தொடர்ந்து அத்துமீறல் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லை பாதுகாப்பு படையினர் இனிப்புகள் வழங்கவில்லை. இதனையடுத்து மாலையில், கொடி இறக்கும் நிகழ்விற்கு முன்னதாக, பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கொடியிறக்கும் நிகழ்ச்சி மாலை 4.45 மணிக்கு தொடங்கியது, சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர், தேசியகொடி இறக்கப்பட்டு, நிமிட நேரத்தில் மடித்து, முழு அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது.

Trending News