புதுடெல்லி: அண்மையில் மறைந்த ராணுவத் தலைமைத் தளபதி (Chief of Defence Staff) ஜெனரல் பிபின் பதவியை நிரப்பும் வரையில், ராணுவத் தளபதி எம்எம் நரவனே, தலைமைப் பணியாளர் குழுவின் தலைவராக (chairman of the Chiefs of Staff Committee) பொறுப்பு வகிப்பார்.
டிசம்பர் 8 அன்று தமிழகத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் (CDS Bipin Rawat) இறந்ததைத் தொடர்ந்து அந்த பதவி காலியானது. ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று சேவைகளின் தலைவர்களின் மூத்தவர் என்பதால், ஜெனரல் நரவனேவுக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
IAF தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி,செப்டம்பர் 30 தேதியன்று பதவியேற்றார். கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோர் நவம்பர் 30ஆம் தேதி பதவியேற்றார்.
ALSO READ | பிபின் ராவத்! முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி நியமனம்
சிடிஎஸ் என்ற நான்கு நட்சத்திர ஜென்ரல் பதவியிடத்தை பதவியை உருவாக்குவதற்கு முன்பு, மூன்று சேவைத் தலைவர்களில் மூத்தவராக இருப்பவரே, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (chairman of the Chiefs of Staff Committee) பொறுப்புகளை கவனித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முப்படைத் தளபதிகளின் ஊதியம் மற்றும் இதர சலுகைகளுடன் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும், செயலாளராகவும் செயல்படுவார்.
ஜெனரல் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களின் மரணத்திற்கு பாதுகாப்புப் படைகளின் குழு (CoSC) செவ்வாய்க்கிழமையன்று கூடி இரங்கல் தெரிவித்தது.
விபத்தில் இருந்து தப்பிய ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் புதன்கிழமை (2021, டிசம்பர் 15) உயிரிழந்தார்.
ஜெனரல் நரவனே ராயல் சவுதி ஆயுதப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபஹ்த் பின் அப்துல்லா அல்-முதாயருடன் தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து ஜெனரல் நரவனே விவாதித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
LSO READ | பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குறித்த முழுத் தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR