உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் இளம் தலித் பெண் நான்கு உயர் சாதி ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
அவர்கள் திங்கள்கிழமை (அக்டோபர் 12) காலை லக்னோவுக்கு புறப்பட்டனர். அவர்களின் பயணத்திற்கு உத்தரபிரதேச போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலியானவரின் சடலம் செப்டெம்பர் 03ம் தேதி அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. போலீஸார் இறுதி சடங்கை இரவிலேயே நடத்த கட்டாயப்படுத்தினர் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, உத்திர பிரதேச அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவத் துறை, ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட 19 வயது தலித் வழக்கில் “கற்பழிப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது குறிப்பட்டுள்ளது.
இது தொடர்பான சான்றிதழை, உத்தரபிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்துடன் சமர்ப்பிக்கப்பத்தது.
இதற்கிடையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலகாபாத் ஐகோர்ட் முன் ஆஜராக லக்னோவுக்கு ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட குடும்பம் புறப்படுகிறது.
ALSO READ | Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!
ஹத்ராஸ் எஸ்.டி.எம்.அஞ்சலி கங்வார் குடும்பத்துடன் லக்னோவுக்குச் செல்கிறார், இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜராக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) வினீத் ஜெய்ஸ்வால் ஆகியோர் குடும்பத்துடன் செல்கின்றனர்
ஹத்ராஸ் வழக்கில் (Hathras case) இன மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட எதிர்க்கட்சி விரும்புகிறது என்று முதல்வர் யோகி (Yogi Adityanath) முன்னதாக குற்றம் சாட்டினார்.
ஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டை எரிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும், அமெரிக்கா பாணியில் இன வன்முறை தூண்டி வன்முறை நெருப்பில் நாட்டை தள்ள ஒரு சதி நடந்தது என்றும் இதற்காக வெளிநாடு நிதி தாராளமாக புழங்கியுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
பாதிக்கப்பவரின் குடுபத்தினருடன், குற்றம் சாட்டப்பட்டவர் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
ALSO READ | Hathras Case: ஹதராஸ் வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.. புதிய திருப்பங்கள்..!!!