அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
அஸாம் மாநிலத்தின்கௌகாத்தி மற்றும் ஜோர்ஹாட் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 80 பேர் பலியாகியுள்ளதாக அஸாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 15 பேர் பெண்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வரை அஸாம் கள்ளச்சாராய கோரத்தில் 59 பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியானதை அடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நபர்களில் சிலர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஸாம் பொது மருத்துவமனை இயக்குனர் அனூப் பர்மன் மேற்பார்வையில், மக்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உத்திர பிரதேச மற்றும் உத்ராகண்ட் மாநில எல்லை பகுதியில் உள்ள கிராம மக்கள் சுமார் 100 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் கூட முடிவடையாத நிலையில் தற்போது அஸாமில் கள்ளச்சாராயத்திற்கு 80 பேர் பலியாகியுள்ளது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்... அஸாம் மாநிலம் கொகாத்தியில் இருந்து சுமார் 300 கிமி தொலைவில் அமைந்துள்ள சால்மோரா தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பணியாட்கள், அப்பகுதியில் கிடைக்கும் உள்ளூர் மதுபானமான சுலாய் என்னும் பானத்தை குடித்துள்ளனர். வழக்கமாக தொழிலாளர்கள் குடிக்கும் இந்த பானம் எரிர்பாரா விதமாக அர்களது உயிருக்கு ஆபத்தாய் தற்போது அமைந்துள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து அதிகாரம் பெராத மதுபான விற்பனையாளர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.