மும்பை பாந்த்ராவில் உள்ள MTNL கட்டிடத்தில் தீ விபத்து: 100 பேர் சிக்கியுள்ளனர்

மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 22, 2019, 05:07 PM IST
மும்பை பாந்த்ராவில் உள்ள MTNL கட்டிடத்தில் தீ விபத்து: 100 பேர் சிக்கியுள்ளனர் title=

மும்பை: மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஷாட் சர்க்யூட் காரணமாக தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. தீ அணைக்க முயற்சி தொடந்து நடைபெற்று வருகிறது. எம்.டி.என்.எல் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில், இடது பக்கத்தில் ஒரு குடியிருப்பு பகுதி உள்ளது. வலதுபுறத்தில் இந்திய எண்ணெய் கழகத்தின் அலுவலகம் உள்ளது. தீயை அணைக்கும் பணியில் 20 தீயணைப்பு வாகனம் ஈடுபட்டுள்ளன. 

தீ விபத்து ஏற்பட்டுள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் சுமார் 100 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. கட்டிடத்தின் மேல் பகுதியில் மக்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை கிடைத்த தகவலின் படி, காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விரிவான தகவலுக்காக காத்திருங்கள்.

சமீபத்திய காலங்களில் துரதிர்ஷ்டவசமாக மும்பையில் தீ தொடர்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் தான், கொலாபாவில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலுக்கு அருகே மூன்று மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. 2017 டிசம்பரில் ஒரு கூரை பட்டியில் ஒரு தீப்பிடித்தது, அதில் குறைந்தது 14 பேர் உயிர் இழந்தனர் குறிப்பிடத்தக்கது.

Trending News