எப்படி மக்கா முஸ்லிம்களுக்கு புனிதமானதோ.. அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது

எப்படி மக்கா முஸ்லிம்களுக்கு புனிதமானதோ... அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது" என்ற உதாரணத்தை மேற்கோள் காட்டி வாதம் செய்த சி.எஸ்.வைத்தியநாதன்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 13, 2019, 03:52 PM IST
எப்படி மக்கா முஸ்லிம்களுக்கு புனிதமானதோ.. அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது title=

புதுடெல்லி: 1949 முதல் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை நடத்தப்படவில்லை. அவர்களை அந்த இடத்தையும் கைப்பற்றப்படவில்லை என  வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்சில் ஐந்தாவது நாள் விசாரணை நடந்து வருகிறது. முதலாவதாக, ராம்லாலா விராஜமான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே பராசரன், தனது வாதத்தை நிறைவு செய்யும் போது, ​​முழு நீதி உச்சநீதிமன்றத்தின் பிரத்தியேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று கூறினார். 

ராம் லல்லா விராஜ்மான் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இதுதொடர்பாக தந்து விவாதத்தைத் தொடங்கினார். அப்பொழுது 1949 முதல் பாபர் மசூதியில் பிரார்த்தனை செய்யப்படவில்லை என்று கூறினார். அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பில் இதை எழுதியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இதற்கு ஒப்புக் கொண்டனர், நீதிபதி எஸ்.யு கான், இந்த விவகாரத்தில் சற்றே வித்தியாசமான பார்வையைக் கொண்டிருந்தாலும், கோவிலும் இருந்தது என்பதையும் அவர் மறுக்கவில்லை.

1949 இல் சிலை வைக்கப்படுவதற்கு முன்பே, இந்த இடத்திற்கு இந்துக்கள் பூஜை செய்ய சென்றுள்ளனர் என்று அவர் கூறினார். இந்துக்கள் வருகை தருகிறார்கள். ஒரு இடத்திலேயே கடவுளை வணங்க வேண்டும் என்றால், அங்கு சிலை இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில், கோவர்தன் பர்வத் மற்றும் கங்கையின் உதாரணத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். 72 வயதான ஹாசிம் என்ற சாட்சி, "எப்படி மக்கா முஸ்லிம்களுக்கு புனிதமானதோ... அயோத்தி இந்துக்களுக்கு புனிதமானது" என்று கூறியுள்ளார் என உதாரணத்தை மேற்கோள் காட்டி வாதம் செய்தார் சி.எஸ்.வைத்தியநாதன்.

Trending News