ஜனவரி 8ம் (நாளை) வங்கி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம்!

மோடி தலைமையிலான அரசாங்கத்தின் சமீபத்திய தொழிலாளர் மற்றும் வங்கி கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

Last Updated : Jan 7, 2020, 10:14 AM IST
ஜனவரி 8ம் (நாளை) வங்கி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம்! title=

மோடி தலைமையிலான அரசாங்கத்தின் சமீபத்திய தொழிலாளர் மற்றும் வங்கி கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

அரசாங்கத்தின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிரான "பாரத் பந்த்" போராட்டத்தில் பங்கேற்க பத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் எஃகு மற்றும் ரயில்வே போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சாட்சியாக, வரவிருக்கும் பாரத் பந்த் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பல வங்கி தொழிற்சங்கங்களுக்கு மேலதிகமாக, பல்வேறு இடதுசாரி கட்சிகளும் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளதாக கூளப்படுகிறது.

பாரத் பந்தின் போது அடைக்கப்படும் / திறந்திருக்கும் அங்கங்கள் என்ன?
பாரத பந்த் வேலைநிறுத்தம் அரசாங்கத்தின் புதிய வங்கி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், பல வங்கி தொழிற்சங்கங்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில இடங்களில் ATM சேவைகளும் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதேவேளையில் NEFT  போன்ற ஆன்லைன் வங்கி சேவைகள் சாதாரணமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News