இனி இவங்களாம் மாஸ்க் போட வேண்டாம்! மத்திய அரசின் புதிய கொரோனா விதிமுறைகள்!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 01:57 PM IST
  • 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்டிவைரல்கள் அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.
  • 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.
இனி இவங்களாம் மாஸ்க் போட வேண்டாம்! மத்திய அரசின் புதிய கொரோனா விதிமுறைகள்!  title=

தற்பொழுது இந்தியா கோவிட்-19ன் மூன்றாவது அலையை எதிர்கொண்டுவருகிறது, அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது.  இதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பது ஒன்றுதான்.  இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மத்திய சுகாதார அமைச்சகம் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. 

ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ 

1) 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்டிவைரல்கள்(antivirals) அல்லது மோனோக்ளோனல்(monoclonal) ஆன்டிபாடிகளின் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. 

2) steroids பயன்படுத்தப்பட்டால், அவை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 10 முதல் 14 நாட்களுக்குள் குறைக்கப்பட வேண்டும். 

3) குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு (18 வயதுக்குட்பட்ட) COVID-19 வழிகாட்டுதல்களின்படி, ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் முக கவசம் அணிய தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

4) 6-11 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் உடல்நிலையை பொறுத்து, பெற்றோரின் கண்காணிப்பில் பாதுகாப்பாகவும் சரியான முறையில் முக கவசம் அணியலாம். 

5) 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களுக்கு விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகளின் அடிப்படையில்  முக கவசம் அணிய வேண்டும். 

6) தற்போதுள்ள ஓமிக்ரான் வைரஸின் நோய் பரவலை கருத்தில் கொண்டு நிபுணர்கள் குழுவால் வழிகாட்டுதல்கள் கூறப்படுகின்றன. 

7) COVID-19 ஒரு வைரஸ் தொற்று, இதில்  antimicrobialsக்கு எந்தப் பங்கும் இல்லை. 

8) அறிகுறியற்ற மற்றும் லேசான நோய் பாதிக்கப்பட்டவர்களில், antimicrobials சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

9) கோவிட்-19 நோயின் அறிகுறியற்ற மற்றும் லேசான நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு steroids பயன்படுத்தப்படுவது தீங்கு ஏற்படுத்தக்கூடும். 

10) சரியான நேரத்திலும், சரியான நேரத்திலும், சரியான கால அளவிலும், சரியான அளவிலும் steroids-களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் ஓமிக்ரான் மாறுபாட்டால் ஏற்படும் நோய் தீவிரமானது சற்று குறைவானதுதான் என்று தெரிகிறது.  இருப்பினும் நோய் பரவல்  உருவாவதால், அதனை கவனமாக கண்காணிப்பது அவசியம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  septic shock ஏற்படுமாயின் நோயாளியின் உடல் எடைக்கு தகுந்தவாறு antimicrobials செலுத்தப்படும், இவை மருத்துவமனையில் தீவிர நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. 

மேலும் dexamethasone  0.15 மி.கி/கி.கி, அதிகபட்ச டோஸ் ஆறு மி.கி ஒரு நாளைக்கு ஒரு முறை, அல்லது methylprednisolone 0.75 மி.கி/கி.கி, அதிகபட்ச டோஸ் 30 மி.கி. என்ற அளவில் வழங்குமாறு அமைச்சகம் கூறியுள்ளது.  அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று முதல் ஐந்து நாட்களில் steroids தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ALSO READ | ஜாக்கிரதை; ஒமிக்ரானின் முக்கிய அறிகுறி, கண்களை பாதிக்குமாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News