பிரபல தொலைகாட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை!

23 வயது இளம் பெங்காலி நடிகை மவுமிதா சாஹா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்!

Updated: Mar 10, 2018, 05:39 PM IST
பிரபல தொலைகாட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை!

கொல்கத்தா: 23 வயது இளம் பெங்காலி நடிகை மவுமிதா சாஹா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்!

பிரபல பெங்காலி தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளனியாக இருந்த நடிகை மவுமிதா சாஹா, இன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெற்கு கொல்கத்தாவில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்த சாஹாவினை அவரது பெறோர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். அப்போது அவரை தொடர்புகொள்ள இயலாத நிலையில் வீட்டின் உரிமையாளரை தொடர்புகொண்டு விவரம் கேட்டறிந்தனர்.

அப்போது அவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெறியவந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், மவுமிதா கடந்த சில நாட்களாக சினிமா துறையில் முயற்சித்து வந்துள்ளார் எனவும், வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது மரணம் தற்கொலை தான என்று ஆராய, அவரது கைபேசி அழைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவரது அறையில் தற்கொலை குறித்த தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா எனவும், கடுதாசிகள் ஏதேனும் கிடைக்கின்றதா எனவும் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விதசாரணை செய்து வருகின்றனர்!