கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையத்தில் செல்ஃபி எடுக்கும் போது குறுக்கே வந்ததாக ஆறு நபர்கள் ஜபீ கான் என்பவரை தாக்கியதால் பரபரப்பு....
சனிக்கிழமை காலையில் 15 வயதான ஜபீ கான் தனது இளைய சகோதரருடன் அக்யமாமா பெட்டாவுடன் பெங்களூருவின் உத்தரகல்லி பகுதியில் உள்ள கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அக்காயாம பெட்டிக்கு சுற்றுலாதலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ஆறு பேரை கொண்ட குழு செல்ஃபி எடுக்கு போது அவர் ஃபிரேமில் ஜபீ கான் வந்ததால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இரண்டு பேர் செல்போனில் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது அவர்களின் பின்புறம் ஜபீ கான் நின்றுள்ளார். அது தெரியாமல் அவர்கள் புகைப்படம் எடுக்க பார்த்துள்ளனர். பின்னர், ஜபீ கான்-யை அங்கிருந்து சற்று நகருமாறு அந்த இரண்டு நபர்களும் கூறியுள்ளனர். ஆனால், ஜப்பி ஹான் அலட்சியமாக நகர்ந்து சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு பேருடன் வந்த மேலும் நான்கு பேர் சேர்ந்து ஜபீ கான்-யை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் ஜபீ கானின் வாயில் இருந்த பல் உடைந்தது. மேலும், ஜபீ கானின் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், ஜபீ கான் வைத்திருந்த மொபைல் போனையும் அந்த அன்பர்கள் எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்த
நபர்கள் அந்த இடத்தை விட்டரு சென்றதும் ஜபீ கானின் தம்பி அவரும் தந்தை முபாரக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் ஜப்பிஹானை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்.
இதையடுத்து முபாரக் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 5 ஆண்கள் ஒரு பெண் கொண்ட கும்பல் ஜப்பிஹானை தாக்கியுள்ளனர். அவர்கள் 6 பேரும் மைனர் என்பதால் முபாரக்கிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம் எனத் தெரிவித்தனர்.