Coroa Alert For Delhi: இப்போது டெல்லியில் கொரோனா மேலும் பயமுறுத்தும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள், கோவிட் நோய் தொடர்பாக மக்கள் முன்னேச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. டெல்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் வியாழக்கிழமை டெல்லியில் கோவிட்-19 வழக்குகள் அடுத்த சில வாரங்களில் உச்சத்தை எட்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தையொன்று டெல்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, ஏழு மாதங்களில் முதல் முறையாக, தில்லியில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமையன்று ஆயிரத்தைத் தாண்டியது. டெல்லியில் தொற்று விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது.
புதன்கிழமை 1100 க்கும் மேற்பட்ட வழக்குகள்
தேசிய தலைநகரில் புதன்கிழமை 1,149 புதிய கோவிட் வழக்குகள் பதிவானதும், ஒருவர் தொற்று காரணமாக இறந்தார் என்ற தகவலும் கவலையளிக்கிறது. எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் குமார் மருத்துவமனையில் முகமூடியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | கோவிட் அதிகரிக்கும் நிலையில் மாணவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
2000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள நகரத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். “குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை, எனவே அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, கண் தொற்று மற்றும் வயிற்றில் தொற்று போன்ற அறிகுறிகள் இருப்பதால், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் குமார் தெரிவித்தார்,
குழந்தைகளுக்கு அறிவுரை
“தற்போதைய கொரோனா வைரஸ் XBB.1.16 மாறுபாடு குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதித்து, அது எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா அறிகுறிகளுடன் மேலும் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் குமார் கூறினார். பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்றும், மூத்த குடிமக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
"அடுத்த ஓரிரு வாரங்களில் கோவிட் பாதிப்புகளின் உச்சத்தை காணலாம், பின்னர் அவை குறையத் தொடங்கும்" என்று டாக்டர் குமார் தெரிவித்தார்.
"மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்” என டெல்லியின் கல்வி அமைச்சர் அதிஷி கூறினார். அரசாங்கம் நிலைமையை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | கோவையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ