இந்தியாவில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்... ஆனால்...!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரின் கவலையையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்த 8 முதல் 10 நாட்களுக்கு கோவிட் தொற்று பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2023, 08:13 AM IST
  • கோவிஷீல்ட் தயாரிப்பை மீண்டும் தொடங்கிய சீரம்.
  • வைரஸ் மாறுபாடுகளைக் கண்காணிக்கும் அமைப்பான INSACOG வெளியிட்ட தரவு.
  • நோய் பரவும் கட்டத்தில் வைரஸின் மாறுபாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இந்தியாவில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்... ஆனால்...! title=

நாடு கடந்த 24 மணி நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன.ஆனால் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் போதெல்லாம், ஒரு மாதத்தில் வைரஸ் அதன் உச்சத்தை அடைவதைக் காண முடிந்தது என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்படி, 20 நாட்கள் கடந்துவிட்டன, மேலும் 8 முதல் 10 நாட்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதன் பிறகு தொற்று பாதிப்புகள் குறையத் தொடங்கும். தற்போது கோவிட் பரவும் நிலையை நோக்கி நகர்கிறது என்று கூறலாம். இந்த கட்டத்தில், நோய் உள்ளூர் நிலையில் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பரவி வரும் XBB.1.16 மாறுபாடு

நோய் பரவும் கட்டத்தில் வைரஸின் மாறுபாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. ஓமிக்ரானின் துணை மாறுபாடு XBB.1.16, அதிகரித்து வரும் கோவிட் நோய்களுக்குக் காரணம். இந்த மாறுபாடு மீதான தடுப்பூசியின் செயல்திறன் குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டது. Omicron இன் இந்த அனைத்து வகைகளும் எவ்வளவு ஆபத்தானவை என்பதும் பார்க்கப்பட்டது. இதுவரை நடந்த ஆய்வில் XBB.1.16-ன் தீவிரம் சராசரியை விட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. ஏனெனில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பல வழக்குகள் அறிகுறிகள் இல்லாமல் உள்ளன. நோய்வாய்ப்பட்டவர்கள் எளிதில் குணமடைவார்கள்.

40% கொரோனா தொற்று பாதிப்புகளில் XBB.1.16 மாறுபாடு

இந்தியாவில் வைரஸ் மாறுபாடுகளைக் கண்காணிக்கும் அமைப்பான INSACOG இன் தரவுகளின்படி, Omicron இன் 12 துணை வகைகள் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் இடையே செயல்பாட்டில் இருந்தன. இந்தியாவில் Omicron இன் துணை மாறுபாடு XBB.1.16 தொற்று பாதிப்பு, பிப்ரவரியில் 21.6% என்ற அளவில் இருந்தது. இது மார்ச் மாதத்தில் 35.8% ஆக அதிகரித்து இப்போது 40% ஐ நெருங்கியுள்ளது. தற்போது, ​​XBB.2, XBB.1, XBB.2.4, XBB.1.9.1 உட்பட Omicron-ன் பல துணை வகைகள் உள்ளன. BA.1, BA.2, BQ.1, BA.4, XBB, BA.2.75 போன்ற முந்தைய வகைகள் Omicron இலிருந்து வந்துள்ளன.

மேலும் படிக்க | இந்தியாவில் மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா! ஒரே நாளில் 7830 பேருக்கு தொற்று!

கோவிஷீல்ட் தயாரிப்பை மீண்டும் தொடங்கிய சீரம்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா புதன்கிழமை கூறுகையில், அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளோம். எங்களிடம் ஏற்கனவே கோவாக்ஸ் தடுப்பூசியின் 6 மில்லியன் 'பூஸ்டர்' டோஸ்கள் உள்ளன. பெரியவர்கள் ஒரு 'பூஸ்டர்'டோஸ் எடுக்க வேண்டும் என்று கூறினார். நிறுவனம் டிசம்பர் 2021 இல் இந்த தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்கள் தடுப்பூசி வாங்கலாம்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை சந்தையில் இருந்து வாங்கலாம் என்று புதன்கிழமை தெரிவித்தார். தடுப்பூசிக்கு பஞ்சமில்லை. மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளது மற்றும் நாட்டில் 220.66 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றாலும், காலப்போக்கில் தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. ஏற்கனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டிய மருந்தை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | கோவையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News