அதிர்ச்சி... திருமண நாளுக்கு கிப்ட் இல்லை... கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Bangalore Bizarre Incident: திருமண நாளுக்கு கணவன் தனக்கு பரிசளிக்காததால், மனைவி அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 5, 2024, 04:12 PM IST
  • இந்த சம்பவம் பிப். 29ஆம் தேதி நடந்துள்ளது.
  • மனைவி மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிர்ச்சி... திருமண நாளுக்கு கிப்ட் இல்லை... கணவனை கத்தியால் குத்திய மனைவி! title=

Bangalore Bizarre Incident: குடும்ப உறவு என்பது முந்தைய காலகட்டங்களை போல் இல்லாமல், அதில் கணவன் - மனைவி இருவருமே சரிசமமாக முக்கிய பங்கை தற்போது வகிக்கின்றனர். இருவருமே பொருளாதார சுதந்திரங்களை பெற்றுள்ளனர், வீட்டிற்கு அதிக வருமானத்தை கொண்டுவருவதில் பெண்களும் தற்போது முன்னிலை வகிக்கின்றனர். அந்த வகையில், தற்போது குடும்பச் சூழல் என்பது சற்றே ஆரோக்கியமாகவும் உள்ளது. 

அதிக விவாகரத்து நடக்கிறது, உறவு சார்ந்த குற்றங்கள் நடக்கிறது என சிலர் கூறினாலும், ஆண் - பெண் இருவருக்கும் உறவில் சுதந்திரம் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அவை ஒரு சமூகத்தில் முதிர்ச்சியடையும்போது, முதிர்ச்சியான குடும்ப அமைப்பு உருவாகும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. 

ஆண் - பெண் உறவுச் சிக்கல்

குறிப்பாக, குடும்ப அமைப்பே இறுகி சிதிலமடைந்து வருவதாக மேற்கத்திய நாடுகள் கூறினாலும், மீண்டும் அந்த அமைப்பை ஆரோக்கியமானதாகவும் அதில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது. அதாவது குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதை மட்டும் செய்யாமல், அனைத்து விஷயங்களையும் கூட்டாக செய்வதே குடும்ப அமைப்பை ஆரோக்கியமான சூழலுக்கு வரவைக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

மேலும் படிக்க | லஞ்ச வழக்குகளில் எம்பி எம்எல்ஏக்கள் விலக்கு கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இருப்பினும், ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது நூற்றாண்டாக நீடிக்கிறது எனலாம். சங்க காலத்தில் தலைவன் - தலைவியில் ஆரம்பித்து இந்த காலகட்டத்து இன்ஸ்டாகிராம் காதல் வரை பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது எனலாம். ஆண்கள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை பெண்கள் அதிகம் விருப்பப்படுவார்கள், அதில் தவறேதும் இல்லை. ஆனால், அப்படி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதற்காக கத்தி குத்து வரை செல்வது உறவில் பெரிய சிக்கல் உள்ளது என அர்த்தம்.

பெங்களூருவில் நடந்த பயங்கர சம்பவம்

பெங்களூருவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனக்கு கல்யாண பரிசு தரவில்லை என கூறி மனைவி, தனது கணவனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. பெங்களுரு பெல்லந்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு அந்த மனைவி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பெங்களூருவில் வசிக்கும் ராஜ் (37) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவியின் பெயர் திவ்யா (35), இவர் பணியாற்றவில்லை. இவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த ராஜ் போலீசாரிடம் கூறுகையில்,"பிப். 27ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மனைவி திவ்யா சமையலறையில் பயன்படுத்தும் கத்தியை வைத்து, தான் தூங்கிக்கொண்டிருக்கும்போது தனது கையில் குத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

முழு விவரம் என்ன...?

அதிர்ச்சியில் படுக்கையில் இருந்து எழுந்திருத்து, மேலும் காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக திவ்யாவை தள்ளிவிட்டு, பக்கத்துவீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்தேன். கையில் ஏற்பட்ட காயத்துடன் தான் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன். கத்திக் குத்து என்பதால் மருத்துவர்கள் போலீசாருக்கு அப்போது தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில்ஸ"திவ்யா மீது கடந்த மார்ச் 1ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குடும்ப விவகாரம் என்பதால், தம்பதிகள் இருவரும் கலந்து பேசி அதன் பின் எங்களிடம் வரும்படி கூறியுள்ளோம். ராஜ் தனது தாத்தா மரணமடைந்ததால் அவர்களின் திருமண நாளுக்கு முன் மனைவிக்கு பரிசு வாங்க முடியவில்லை என தெரியவந்தது. 

முதல்முறையாக அவர்களின் திருமண நாளுக்கு ராஜ் பரிசு கொடுக்கவில்லை என்றும் அதனால் திவ்யாவுக்கு ராஜின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் தனது மனைவி மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவருக்கு மனநல நிபுணரின் ஆலோசனை தேவைப்படுவதாகவும் ராஜ் கூறினார்" என்றார். 

மேலும் படிக்க | தேர்தல் பத்திர நிதி விவகாரம்... 4 மாத கால அவகாசம் கேட்கும் எஸ்பிஐ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News