சிலிண்டர் விலை உயர்வு; மக்கள் வயிற்றில் மீண்டும் அடி

LPG Price today on 1st Deceber 2021: பெட்ரோலிய நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை (LPG Price Hike) இன்று முதல் உயர்த்தியுள்ளன

Written by - ZEE Bureau | Last Updated : Dec 1, 2021, 09:10 AM IST
சிலிண்டர் விலை உயர்வு; மக்கள் வயிற்றில் மீண்டும் அடி

புது டெல்லி: LPG Price today: மாறி மாறி ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் வணிக கேஸ் சிலிண்டர்களின் விலையில் இன்று அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

வணிக கேஸ் சிலிண்டர்கள்:
வீடுகளுக்கு பயன்படுத்துவதை போல் வணிக நிறுவனங்களில் (Commercial Gas Cylinder) தனியாக வணிக கேஸ் சிலிண்டர்கள் (LPG Gas Cylinder) பயன்படுத்தப்படுவது வழக்கம். வணிக நிறுவனங்களில் சாதாரண கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச எல்பிஜி விலை கடந்த வாரம் முதல் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ALSO READ | இல்லத்தரசிகள் தலையில் இடி, சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறதா? 

பெட்ரோலிய நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை (LPG Price Hike)  இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன. அதன்படி டெல்லியில் நேற்று வரை 2,000 ரூபாயாக இருந்த சிலிண்டர், இன்று 100 ரூபாய் உயர்த்தி 2101 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.2234.5 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி அதிகரிக்கப்பட்ட விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக தேநீர், உணவகம் மற்றும் பேக்கரி நடத்துவோர் கவலை அடைந்துள்ளனர். தேநீர் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனினும் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

புதிய விலை எவ்வாறு சரிபார்க்கவும்
உங்கள் நகரத்தில் கேஸ் சிலிண்டர்களின் புதிய விலையை நீங்கள் அறிய விரும்பினால், அதை அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். இதற்கு, நீங்கள் IOCL இணையதளத்தை (https://cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice) பார்வையிட வேண்டும். இதற்குப் பிறகு, இணையதளத்தில் மாநிலம், மாவட்டம் மற்றும் விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுத்து, தேடலைக் கிளிக் செய்யவும். இதன் பிறகு காஸ் சிலிண்டர்களின் விலை உங்கள் முன் வரும்.

ALSO READ:LPG Subsidy | சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News