பிறந்தநாள் பரிசாக தேஜஸ்விக்கு மக்கள் முதல்வர் பதவியை அளிப்பார்கள்: RJD நம்பிக்கை

15 ஆண்டு நிதீஷின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் வாக்குகளாக மாறுமா அல்லது தேஜஸ்வி என்ற இளைய தலைவருக்காக பீகார் காத்திருக்கிறதா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 08:58 AM IST
  • பீகாரில் வாக்கு எண்ணிக்கிய இன்று துவங்கி நடந்து வருகிறது.
  • 38 மாவட்டங்களில் 55 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை.
  • பீகார் மக்கள் முதல்வரின் நாற்காலியை அவருக்கு பரிசாக அளிப்பார்கள்-காங்கிரஸ்.
பிறந்தநாள் பரிசாக தேஜஸ்விக்கு மக்கள் முதல்வர் பதவியை அளிப்பார்கள்: RJD நம்பிக்கை  title=

பாட்னா: அரசியல் தேர்தல் களம் என்பது பெரும்பாலும் ஆரவாரம் மிக்கதாக இருப்பது வழக்கம். அதிலும் பீகாரின் அரசியல் களம் எப்போதும் பல வித பரபரப்புகளையும் அதிரடி திருப்பங்களையும் கொண்டுள்ளதாக இருக்கிறது. பீகாரில் (Bihar) சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களும் அப்படிப்பட்ட பல வித தருணங்களைக் கண்டது. ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட வாக்கு எண்ணிக்கிய இன்று துவங்கி நடந்து வருகிறது.

பீகார் தேர்தல்களின் கருத்துக் கணிப்புகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) மற்றும் மகா கூட்டணி அபார வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, தேஜஸ்வி யாதவுக்கு (Tejashwi Yadav) பிறந்தநாள் பரிசாக முதல்வரின் நாற்காலியே வழங்கப்படும் என தேஜ் பிரதாப் யாதவ் திங்களன்று தெரிவித்தார்.

தேஜஸ்வி திங்கள்கிழமை தனது 31 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது RJD ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

"இந்த தேர்தலில் பீகார் மக்கள் நிதீஷ்குமாரை நிராகரித்து உள்ளனர். மாநிலத்தில் வேலையின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதில் JD(U) அரசாங்கத்தின் இயலாமை காரணமாக அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். தவிர, அவரது அரசாங்கம் ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது" என்று தேஜ் பிரதாப் பி.டி.ஐ யிடம் கூறினார்.

"கருத்துக் கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும், பீகார் மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும் ஆணையை எங்களுக்குத் தருவார்கள்" என்று தேஜ் பிரதாப் கூறினார்.

ALSO READ: பீகாரில் வெல்லப்போவது நிதிஷ்குமாரா? தேஜஸ்வியா?... தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..!

மேலும், காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஜா ஆசாத் தேஜஸ்வி யாதவை வாழ்த்தி, பீகார் மக்கள் முதல்வரின் நாற்காலியை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் என்றார்.

"பீகாரில் தேஜஸ்வி யாதவின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்" என்று ஆசாத் கூறினார்.

தேஜஷ்வி பீகார் முதல்வரானால், அவரது தந்தை லாலு பிரசாத் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோருக்குப் பிறகு அவர்களது குடும்பத்தில் இருந்து முதல்வராக பதவியேற்கும் மூன்றாவது உறுப்பினராக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகளின் எண்ணிக்கை துவங்கிவிட்டன.

தேர்தலுக்குப்பிறகான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆளும் JD(U) BJP கூட்டணிக்கு பெரும் தோல்வியையே கணித்துள்ளன. RJD-யின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

38 மாவட்டங்களில் 55 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

15 ஆண்டு நிதீஷின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் வாக்குகளாக மாறுமா அல்லது தேஜஸ்வி என்ற இளைய தலைவருக்காக பீகார் காத்திருக்கிறதா என்பது கூடிய விரைவில் தெரிய வரும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News