பட்னா: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றுபடுமாறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், மகா கூட்டணியின் சில தலைவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் கூட்டத்தில் கலந்துக் கொண்டபோது, அவர்ஆத்திரமடைந்தார். மகா கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் அவர் நேரடியாக எச்சரித்துள்ளார்.
மகா கூட்டணி கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டதற்கான காரணம் என்ன? இந்த சந்திப்பின் போது, ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங்கை முதல்வர் நிதிஷ் கண்டித்துள்ளார். அதிகம் பேசாதீர்கள் என்று அவரை முதல்வர் நிதிஷ்குமார் கடிந்துக் கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா மற்றும் எம்எல்ஏக்களுக்கு நிதிஷ்குமார் அறிவுரையும் வழங்கியுள்ளார். அஜித் சர்மாவுக்கு பாஜகவுடனான தொடர்பை சாடிய முதல்வர் நிதிஷ் குமார், எம்எல்ஏக்கள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தங்கள் தலைவரிடம் பேசுவதே நல்லது என்று கேட்டுக் கொண்டார். பீகார் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக ஆளும் கூட்டணிக் கட்சியின் கூட்டம் நடந்துள்ளது.
மேலும் படிக்க | 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்
முதல்வர் நிதிஷ் தலைமையில் சென்ட்ரல் ஹாலில் ஆர்ஜேடி, ஜேடியு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங்கை முதல்வர் நிதிஷ் கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.
முதல்வர் நிதீஷ்குமார் பேசும்போது, பல எம்எல்ஏக்களுக்கு வகுப்பு எடுத்தார். ஆர்ஜேடி தலைவர் சுனில் சிங் மீது முதல்வர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் அனைவருக்கும், தனது திட்டம் தொடர்பாக தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மழைக்காலக் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாக சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் சவுத்ரி தெரிவித்தார்.
மேலும் படிக்க | வாரணாசி முதல் கொச்சி வரை... இந்தியாவில் உள்ள டாப் 10 ரெட் லைட் ஏரியாக்கள்!
பீகாரில் அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் ஜேடியு தேசிய தலைவர் லாலன் சிங் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். லாலன் சிங், பீகாரில் ஒன்றுபட்ட மகா கூட்டணி என்று கூறியுள்ளார்.
பாஜகவை குறிவைத்து பேசிய லலன் சிங், என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்யுங்கள், ஆனால் பீகாரில் மகா கூட்டணி ஒன்றுபட்டு வலுவாக உள்ளது என்றார். பாஜக ஒரு குழப்பமான கட்சி என்றும், அதனால் தான் மகா கூட்டணியில் விரிசல் இருப்பதாக தினமும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதாகவும் லாலன் சிங் குற்றம் சாட்டினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக, எதிர் கட்சிகளின் கூட்டம் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்ரே பிரிவு, தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ