தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி.... 2024 தேர்தலுக்கு தயாராகும் எதிர் கட்சிகள்!

லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் நிர்ணயம் குறித்து, சிம்லா கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2023, 01:10 PM IST
  • 2015 சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை நிதீஷும் லாலுவும் நிறுத்தினார்கள்.
  • எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதில் உள்ள ஒற்றுமையை பொறுத்தே அமையும்.
  • 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
தேசபக்தி  ஜனநாயகக் கூட்டணி.... 2024 தேர்தலுக்கு தயாராகும் எதிர் கட்சிகள்! title=

தேசபக்தி  ஜனநாயகக் கூட்டணி: எதிர்க்கட்சி கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, எதிர்க்கட்சி கூட்டணியின் பெயர் தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி (PDA) என்று பெயரிடப்பட்டுள்ளது. சிம்லா கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பிடிஏ என்ற பெயரை  இறுதி செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் தேசபக்தி ஜனநாயகக் கூட்டணி  என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்லா கூட்டத்தில் கூட்டணியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது. பாட்னாவில் 15-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அந்தஸ்து தேசிய அளவில் அதிகரித்துள்ளது. இதுதவிர ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீண்டும் அரசியலில் வலுப்பெற்று வருகிறார். இந்த இரு தலைவர்களும் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

எதிர் கட்சிகளின்  கூட்டம் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் கடந்த ஜூன் 23ம் தேதி காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. எதிர்பார்த்ததைப் போலவே, நவீன் பட்நாயக், மாயாவதி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதில் நவீன் பட்நாயக், சந்திரசேகரராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, சிவசேனா உத்தவ் தாக்ரே பிரிவு, தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் நான்கு மணிநேரம் நடந்த எதிர் கட்சிகளின் கூட்டம் முடிந்த பிறகு, கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பேசிய நிதீஷ் குமார், “தேர்தலை ஒன்றாகச் சந்திக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க விரைவிலேயே இன்னொரு கூட்டம் நடக்கும். 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளன,” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்

2015 சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை நிதீஷும் லாலுவும் நிறுத்தினார்கள். எனினும், 2024ல் நிலைமை எப்படி இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் அதில் உள்ள ஒற்றுமையை பொறுத்தே அமையும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நீடிப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, ம்த்திய அளவில் காங்கிரஸுடன் ஒன்றாக இணைய நினைக்கும் சில கட்சிகளுக்கு இடையில், மாநில அளவில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் உள்ளது. திரிணமுல் காங்கிரஸ் மாநில அளவில் காங்கிரஸ் மற்றும் சிபிஐ கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், மத்திய கைக் கோர்ப்பது மக்கள் மத்தியில் முரணான செய்கையாகவே பார்க்கப்படும். பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் எழுந்துள்ள ஒற்றுமை நீடிக்குமா, இந்தக் கூட்டணியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | Old Pension Scheme சூப்பர் அப்டேட்: முக்கிய கூட்டம்.... விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News