24 ஆண்டுகளாக தேர்தலில் தோல்வியடையாத பாஜக CM ரகுபார் தாஸ் தனது கோட்டையில் சரிவு

ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் 1995 முதல் வெற்றி பெற்று வரும் பாஜக முதல்வர் ரகுபார் தாஸ், இந்த முறை சரிவை கண்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2019, 02:54 PM IST
24 ஆண்டுகளாக தேர்தலில் தோல்வியடையாத பாஜக CM ரகுபார் தாஸ் தனது கோட்டையில் சரிவு title=

புது டெல்லி: ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வரும் நிலையில்., ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ் பெரும் பின்னடைவு சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய், அவருக்கு எதிராக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகின்றார்.

முதல் மூன்று சுற்றுகளில் முதல்வர் ரகுபார் தாஸுக்குப் பின்னால் இருந்த ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் சாரியு ராய், நான்காவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை உள்ளன. முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜார்கண்ட் தேர்தலில், ரகுபார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியை கிட்டத்தட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் குறிப்பிடத்தக்கது.

ரகுபர் தாஸின் கோட்டையாக கருதப்படும், அவர் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் 1995 முதல் அந்த தொகுதியில் ஒரு தேர்தலிலும் தோல்வியடையவில்லை. ஆனால் தற்போது அவரது அமைச்சரவையில் பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த சாரியு ராய், தனக்கு கட்சியில் சீட் வழங்காததால், கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தலைப்புச் செய்திகளில் நீடித்து வருகிறார். முதல்வர் ரகுபார் தாசை எதிர்த்து போட்டியிட்ட அவர் முன்னிலை வகித்து வருகிறார். 

ராய் அவர் எட்டு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளார். 1974 இல் ஆர்.எஸ்.எஸ் அவரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவுக்கு (பி.ஜே.வி.எம்) அனுப்பியது. அன்று முதல் அவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ரூ .950 கோடி தீவன ஊழலை அம்பலப்படுத்தியதற்காக ராய் மிகவும் பேசப்பட்டார். முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மது கோட சிறைக்கு செல்ல ரூ .4,000 கோடி இரும்பு தாது சுரங்க முறைகேட்டை அம்பலப்படுத்துவதில் அவர் முன்னணியில் உள்ளார்.

முன்னாதக நவம்பர் 15, 2000 அன்று பீகாரில் இருந்து ஜார்கண்ட் பிரிக்கப்பட்ட பின்னர், ​​மாநிலத்திற்கு தனி சட்டசபை உருவாக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த காலகட்டத்தில், ஜார்க்கண்ட் மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும், ஆறு முதல்வர்களையும் கண்டிருக்கிறது. தற்போது ​​2019-ல் நான்காவது சட்டமன்றத் தேர்தல் முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் ரகுபார் தாஸு பின்தங்கி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய் முன்னிலை வகித்து வருகின்றார். 

பாஜக மூத்த தலைவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து சாரியு ராய் ஒரு சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் 1995 முதல் வெற்றி பெற்று வரும் ரகுபர் தாஸ், இத்தொகுதி தனது கோட்டை என வர்ணித்து வருகின்றார். முன்னதாக கடந்த 2014 தேர்தலில் ராகுபார் தாஸ் காங்கிரஸின் ஆனந்த் பிஹாரி துபேவை 61.48 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News