கவுத்தம் கம்பீருக்கு கிழக்கு டெல்லியை ஒதுக்கியது பாஜக...

எதிர்வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுத்தம் கம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார்!

Last Updated : Apr 22, 2019, 11:10 PM IST
கவுத்தம் கம்பீருக்கு கிழக்கு டெல்லியை ஒதுக்கியது பாஜக... title=

எதிர்வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுத்தம் கம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுத்தம் கம்பீர் சமீபத்தில் பாஜக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு டெல்லி மக்களவை தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் கிழக்கு டெல்லியில் இருந்து போட்டியிடுவார் என மத்திய பாஜக தேர்தல் குழு அறிவித்துள்ளது.

அதேவேளையில் புது டெல்லியின் பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி மீண்டும் புது டெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.

கிழக்கு டெல்லியல் களமிறங்கும் கவுத்தம் கம்பீர், காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அத்திஷி ஆகியோரை எதிர்கொள்வார்.

மறுபுறம் லேக்கி, ஆம் ஆத்மியின் நட்சத்திர வேட்பாளர் பிரஜேஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அஜய் மகான் ஆகியோரை எதிர்கொள்ள உள்ளார்.

பத்ம ஸ்ரீ விருது பெற்ற கவுத்தம் கம்பீர் கடந்த மார்ச் 22-ஆம் நாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரின் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். தற்போது இவருக்கு பாஜக சார்பில் கிழக்கு டெல்லி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு டெல்லி தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்மோகன் காந்தியை பாஜக-வின் மகேஷ் கிரி 1,90,463 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதேவேளையில் புது டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மகானை பாஜக வேட்பாளர் மீனாட்சி லேக்கி 1,62,708 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மக்களை உறுப்பினராக பதவியேற்றார்.

பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள டெல்லியில் வாக்குப்பதிவு வரும் மே 12-ஆம் நாள் நடைபெறவுள்ளது, பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 23-ஆம் நாள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News