திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேஷ் கோபி!

திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 3, 2019, 09:19 PM IST
திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேஷ் கோபி!

திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெறுங்கி வரும் நிலையில் கேரள மாநிலம் திரிச்சூர் மக்களவை தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என பாஜக தலைமை அறவித்துள்ளது. நடிகர் அஜீத்குமார் நடித்த தீனா உள்ளிட்ட படங்களில் நடித்தவரான மலையாள நடிகர் சுரேஷ் கோபியை, திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம்காணுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பாஜக-வின் நியமனத்தின் பேரில் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக அவர் பதவி வகித்துவரும் நிலையில், தற்போது இந்த வாய்ப்பானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பதிலளித்த சுரேஷ் கோபி, தன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை பாஜக தலைமை வழங்கியுள்ளதால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

மேலும், பாஜக-வின் அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியில் நாடு மூன்று மடங்கு வளர்ச்சியை பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஆனது ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகள் கொண்ட கேரளாவில் மக்களவை தேர்தல் ஆனது வரும் ஏப்ரல் 11-ஆம் நாள் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News