குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நாரன்பூரில் வருகை தந்து வாக்களித்தார்.
குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று நடக்க இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வருகை தந்துள்ளார். நாரன்பூர் வாக்குச் சாவடியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வாக்களித்தார்.
BJP President Amit Shah cast his vote in Naranpura #GujaratElection2017 pic.twitter.com/dFQyY5JIDQ
— ANI (@ANI) December 14, 2017
இன்றைய தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் வாக்களிக்க உள்ளனர்.
Media surrounds #BJP President #AmitShah as he leaves after voting in Ahmedabad's Naranpura #GujaratElection2017 pic.twitter.com/W7faqYT9x5
— ANI (@ANI) December 14, 2017