பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைப்பு

மத்திய அரசின் உத்தரவை அடுத்து. மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2018, 05:50 PM IST
பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைப்பு title=

கச்சா எண்ணெய் உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேவேலையில் ரூபாயின் மதிப்பு  சரிவடைந்து வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ஜெட்லி, "பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைக்கப்படும். அதாவது பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனம் ரூ.1 என மொத்தம் ரூ.2.50 குறைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், திரிபுரா, உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை எண்ணெய் விலையில் 2.5 ரூபாய்க்கு குறைக்கப்படும் என்று அறிவித்தது. 

 

இதன்மூலம் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் சுமார் ரூ.5 வரை குறைத்துள்ளது. இதேபோல மற்ற மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டால், பொதுமக்கள் பயனடைவார்கள்.

 

Trending News