BJP: புதிய குழுவை அறிவித்து முதல் முறையாக செய்த அதிரடி மாற்றங்கள் என்ன தெரியுமா?

கட்சியின் புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (JP Nadda) இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2020, 04:59 PM IST
BJP: புதிய குழுவை அறிவித்து முதல் முறையாக செய்த அதிரடி மாற்றங்கள் என்ன தெரியுமா? title=

புதுடெல்லி: கட்சியின் புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (JP Nadda) இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். இந்த முறை, பாஜகவின் புதிய அணியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது. ஜே.பி.நட்டா முதல்முறையாக பல மாற்றங்களை செய்துள்ளார். 

குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இதுவே முதல் முறை

பாஜக முதல் முறையாக 12 தேசிய துணைத் தலைவர்களை நியமித்துள்ளது. புதிய அணியில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி சூர்யா பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், பி முரளிதர் ராவ், அனில் ஜெயின், சூரஜ் பாண்டே ஆகியோருக்கு பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எட்டு புதிய தேசிய பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அணியில் தேசிய செய்தித் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடக பொறுப்பாளராக அனில் பலூனி (Anil Baluni) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய துணைத் தலைவர்கள்
டாக்டர் ராமன் சிங்
வசுந்தரா ராஜே சிந்தியா
ராதா மோகன் சிங்
பைஜயந்த் ஜெய் பாண்டா
ரகுபார் தாஸ்
முகுல் ராய்
ரேகா வர்மா
அன்னபூர்ணா தேவி
டாக்டர் இந்திய பென் சியால்
டாக்டர் ஏ.கே.அருணா
எம் சுபா அவே
அப்துல்லா குட்டி

தேசிய பொதுச் செயலாளர்கள்
பூபேந்திர யாதவ்
அருண் சிங்
கைலாஷ் விஜயவர்ஜியா
துஷ்யந்த் குமார் கெளதம்
டி.புரண்டேஸ்வரி
விசில் சூரியன்
தருண் சக்
திலீப் சைகியா

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கட்சியின் பொறுப்பாளர்களின் புதியப் பட்டியலை அறிவித்துள்ளார்.  நாட்டின் பல மாநிலங்களிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7 ஆம் தேதியும் நடைபெறும். தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இதேபோல், மத்திய பிரதேசத்தின் 29 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும். ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த பிறகு, மத்திய பிரதேசத்தின் குவாலியர்-சம்பல் பகுதியைச் சேர்ந்த அவரது துணை எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலுக்கான தேதிகளை மூன்று நாட்களுக்குப் பிறகு அறிவிக்கும்.

Read Also | பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிகாட்டுதலை வெளியிட்ட EC!!

Trending News