மும்பை: மும்பையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிப்பறைகளின் பற்றாக்குறைரை போக்க அனைத்து வசதிகளுடன் கூடிய ஜம்போ கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. மும்பையில் முதல் ஜம்போ கழிப்பறை மேற்கு அந்தேரியின் ஜுஹு தெருவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது அதிநவீன துப்புரவு சிஸ்டம், செய்தித்தாள்கள், இலவச வைஃபை வசதி (free Wi-Fi access), டிவி வசதி, எல்.ஈ.டி மற்றும் காத்திருக்கும் (Waiting area Toilet) பகுதி போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.
உடல் ஊனமுற்றோருக்கு தனியாக கழிவறைகள் ஒதுக்கீடு:
இந்த இரண்டு மாடி கழிப்பறைகளில் 88 கழிவறைகள் நிறுவப்பட்டுள்ளன. 4,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த இரண்டு மாடி பொது கழிப்பறையில் தரை தளத்தில் 60 கழிவறைகளும், முதல் தளத்தில் 28 கழிப்பறைகளும் உள்ளன. இது பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி - BMC) கட்டிய மிகப்பெரிய கட்டிடமாகும். இருப்பினும், இந்த கழிப்பறையின் பயன்பாட்டிற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்த பொது கழிப்பறை சுமார் 60,000 குடிசைவாசிகளுக்கு பயன்படும். ஒவ்வொரு குடும்பமும் வரம்பற்ற பயன்பாட்டிற்கு (unlimited use) மாதத்திற்கு ரூ .60 செலுத்த வேண்டும்.
"இது நகரத்தின் மிகப்பெரிய பொது கழிப்பறை என்ற பெருமை மட்டுமல்ல, மேல் தளம் ஆண்களுக்கானது, தரை தளம் பெண்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கு நான்கு கழிவறைகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது மற்றும் கழிப்பறை ஒரு பகுதியில் சிறிய தோட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது" குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மனித கழிவு மூலம் வருமானம், வாழ்க்கை முறை என அனைத்தையும் கண்டுபிடிக்க முடியுமா?
கழிப்பறைகள் பற்றாக்குறை:
மும்பையில் போதிய கழிப்பறைகள் இல்லாதது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. 35 முதல் 50 குடிமக்களுக்கு ஒரு பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. உண்மையில் இது பெரும் சிரமாமகவும், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில இடங்களில், ஒவ்வொரு நாளும் 100 முதல் 150 க்கும் மேற்பட்டோர் கழிப்பறையைப் பயன்படுத்துகின்றனர். மும்பையில் கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, தற்போதுள்ள சிறிய கழிப்பறைகளை இடித்துவிட்டு, அங்கு ஒன்று மற்றும் இரண்டு மாடி கழிப்பறைகளை ஸ்வச் பாரத் அபியான் கீழ் கட்ட நகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஜுஹு தெருவில் (Juhu Gully) உள்ள தாஷ்கண்ட் பேக்கரியில் சுமார் நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு ஜம்போ கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கார்ப்பரேட்டர் மெஹர் ஹைதரின் (Meher Mohsin Haider) முயற்சியால் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது கூட இந்த கழிப்பறையின் பணிகள் தொடர்கின்றன. இந்த கழிப்பறை மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ALSO READ | 174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR