தாஜ் மஹாலில் குண்டு: மர்ம தொலைபேசி அழைப்பால் பீதி, பதட்டம்!!

தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சிஐஎஸ்எஃப் மற்றும் ஆக்ரா போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு செயலிழக்கச் சுய்யும் குழுவும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Mar 4, 2021, 12:31 PM IST
  • தாஜ்மஹாலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பு.
  • சிஐஎஸ்எஃப் மற்றும் ஆக்ரா போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
  • உத்தரபிரதேசத்தின் ஃபெரோசாபாத்தில் இருந்து இந்த அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
தாஜ் மஹாலில் குண்டு: மர்ம தொலைபேசி அழைப்பால் பீதி, பதட்டம்!!

ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றாக, காதல் சின்னமாக, கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் தாஜ் மஹால் இந்தியாவின் பெருமையாக கருதப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள தாஜ்மஹாலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக திடீரென இன்று வந்த செய்தியைத் தொடர்ந்து அங்கு பீதியும் பதட்டமும் தொற்றிக்கொண்டன. இதன் பின்னர், அங்கு இருந்த பல சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலிற்குள் (Taj Mahal) குண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தாஜ் மஹாலின் பாதுகாப்புப் பணிகளின் பொறுப்பைக் கொண்டிருக்கும் ஆக்ரா போலீஸ் மற்றும் சிஐஎஸ்எஃப் குழு, தாஜ்மஹால் வளாகத்திற்குள் தீவிர தேடலை மேற்கொண்டன.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாஜ் மஹாலிற்குள் இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் இரண்டும் மூடப்பட்டன.

ALSO READ: Good News: நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இனி 24x7 எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

தகவல்களின்படி, உத்தரபிரதேசத்தின் ஃபெரோசாபாத்தில் இருந்து இந்த அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த அழைப்பை செய்தது யார் என்பதை கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சிஐஎஸ்எஃப் மற்றும் ஆக்ரா போலீசார் (Police) சோதனையிட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு செயலிழக்கச் சுய்யும் குழுவும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இதுவரை, சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. செய்தி நிறுவனமான பி.டி.ஐ படி, வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு ஒரு மோசடியாக இருக்ககூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களிலும், தாஜ்மஹாலில் குண்டு இருப்பதாக அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் தாஜ் மஹால் வளாகம் முழுவதையும் முழுமையாகத் தேடினார்கள், ஆனால் அது பின்னர் ஒரு மோசடி அழைப்பு என்று தெரிய வந்தது.

தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள விளக்குகள் போடப்பட்டு, ஸ்னிஃபர் நாய்களும் கொண்டு வரப்பட்டன. தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சொதனை மெற்கொள்ளப்பட்டது. சந்தேகப் படும் வகையில் எதுவும் கிடைக்காததால், பின்னர் தேடல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

தாஜ் மஹாலில் குண்டு (Bomb) வைக்கப்பட்டுள்ளதாக இன்று வந்த அழைப்பைப் பற்றி மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ALSO READ: ஒரே பள்ளியில் 54 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிப்பு! பெற்றோர்கள் அதிர்ச்சி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News