நடிகர் விஜய் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல்!!

இரவு சுமார் 12.20 மணிக்கு, கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த ஒரு போலிஸ்காரருக்கு நடிகர் விஜய் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக அழைப்பு வந்துள்ளது. உடனடியாக விருகம்பாக்கம் காவல் துறை எச்சரிக்கப்பட்டு, இரண்டு போலிஸ் ரோந்து குழுக்கள், நடிகர் விஜயின் இரண்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2020, 11:32 AM IST
  • சனிக்கிழமை நள்ளிரவிற்குப் பிறகு, தமிழ் திரைப்பட நடிகர் விஜயின் சாலிகிராம வீட்டில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
  • நடிகர் விஜயின் இரு வீடுகளிலும் தீவிரமான தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
  • தொலைபேசி அழைப்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நடிகர் விஜய் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல்!! title=

சென்னை: சனிக்கிழமை நள்ளிரவிற்குப் பிறகு, தமிழ் (Tamil) திரைப்பட நடிகர் விஜயின் (Actor Vijay) சாலிகிராம வீட்டில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறை (Police) கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு, பணியில் இருந்த அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

விரிவான விசாரணை மற்றும் சோதனைக்குப் பிறகு இது ஒரு போலி மிரட்டல் (hoax call) என்று அறிவிக்கப்பட்டது.

தொலைபேசி அழைப்பை ட்ரேஸ் செய்த போலீசார், புதுச்சேரி அருகில் உள்ள மரக்காணத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்பதைக் கண்டறிந்தது. அழைத்தவர் மனநிலை பாதிகப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலிஸ் அவரை எச்சரிக்கை செய்து விட்டு விட்டது.

இரவு சுமார் 12.20 மணிக்கு, கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த ஒருவருக்கு இந்த அழைப்பு வந்துள்ளது. உடனடியாக விருகம்பாக்கம் காவல் துறை எச்சரிக்கப்பட்டு, இரண்டு போலிஸ் ரோந்து குழுக்கள், நடிகர் விஜயின் இரண்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டன. வெடிகுண்டை கண்டறிந்து அகற்றும் குழுவும் போலிஸ் நாயுடன் விஜயின் வீடுகளை அடைந்தன.

ALSO READ: கணித மேதை 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்

நடிகர் விஜயின் இரு வீடுகளிலும் தீவிரமான தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. எந்த விதமான வெடி குண்டோ (Bomb) வெடி பொருட்களோ கண்டறியப்படவில்லை. பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து (Marakkanam) வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரின் வீட்டை போலிஸ் குழு அடைந்தது. எனினும், அவரது வீட்டில் இருந்தவர்கள், அந்த நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர்  என்று கூறி அவர் சார்பில் மன்னிப்பு கேட்ட பிறகு, போலிஸ் அவரை எச்சரித்து விட்டது.

இந்த நபர் இதற்கு முன்னரும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, புதுவை முதல்வர் வி. நாராயணசுவாமி மற்றும் புதுவை ஆளுனர் கிரண் பேடி ஆகியோருக்கும் தொலைப்பேசி அழைப்பு மூலம் போலி மிரட்டல்களை விடுத்துள்ளதாகவும் அவரது குடும்ப நபர்கள் தெரிவித்தனர். வீட்டில் யாருடைய ஃபோனையாவது எடுத்துக்கொண்டு இப்படிப்பட்ட போலி மிரட்டல்களை விடுவது அவரது பழக்கமாக இருந்தது.

ALSO READ: Cricketer ரவி சாஸ்திரியின் நிறைவேறாத காதல்

Trending News