வேலை முக்கியமா அல்லது குழந்தை முக்கியமா என்ற நிலைக்கு பெண்களைத் தள்ளாதீர்கள்: மும்பை உயர் நீதிமன்றம்

வேலை முக்கியமா அல்லது குழந்தை முக்கிய என்ற கட்டாயத்திற்கு பெண்களைத் தள்ளாதீர்கள் என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 14, 2022, 07:45 PM IST
  • குழந்தையுடன் போலந்து செல்ல அனுமதி கோரி பெண் வழக்கு
  • குழந்தைக்காக வேலையை விட பெண்களை வற்புறுத்தாதீர்கள்
  • குழந்தையை போலந்து அழைத்துச் செல்ல மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
வேலை முக்கியமா அல்லது குழந்தை முக்கியமா என்ற நிலைக்கு பெண்களைத் தள்ளாதீர்கள்: மும்பை உயர் நீதிமன்றம் title=

கணவருடன் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், போலந்து நாட்டில் வேலை கிடைத்துள்ளதால் தனது 9 வயது மகளை உடன் அழைத்துச் செல்ல அனுமதி கோரி பெண் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

ஆனால், குழந்தையை போலந்து அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்த தந்தை, அவ்வாறு சென்றால் தான் குழந்தையை மீண்டும் பார்க்க முடியாது என நீதிமன்றத்தில் கூறினார். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், போலந்தில் நிலைமை சரியில்லை எனவும் குழந்தையின் தந்தை கூறினார். இந்த வழக்கில் நீதிபதி பாரதி டாங்ரே கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தாய் தனது ஒன்பது வயது மகளை போலந்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், அதே சமயம் குழந்தையின் தந்தை நேரடியாகவும், இணைய வழியிலும் குழந்தையிடம் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வெளியானது புதிய பட்டியல்!

ஒரு மகளுக்கும் அவளது தந்தைக்கும் இடையிலான அன்பைப் போல மிகவும் சிறப்பு வாய்ந்த எதுவும் இதுவரை இருந்ததில்லை. தனது மகள் இடம் பெயர்ந்துவிடுவார் என்ற எண்ணத்தில் வேதனைப்படும் தந்தை ஒருபுறமும், தனது முன்னேற்றுவதற்காக ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பும் பெண் மறுபுறமும் உள்ளனர். தனக்கான வேலையைச் செய்ய விரும்பும் ஒரு தாயின் வாய்ப்புகளை நீதிமன்றம் மறுக்க முடியாது.

வேலை முக்கியமா அல்லது குழந்தை முக்கியமா என்ற நிலைக்கு பெண்களைத் தள்ள வேண்டாம். குழந்தைக்காக பெண்களின் வேலை செய்யும் உரிமையை மறுக்க முடியாது. குழந்தை பிறந்ததில் இருந்து இன்று வரை தனியாகவே அவரைத் தாய் வளர்த்துள்ளார்.   சிறுமியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் தனது தாயுடன் செல்ல வேண்டியது அவசியம். 

பணிபுரியும் பெண்ணாக இருந்தாலும், அவரது வேலை மற்றும் குழந்தையின் கவனிப்பு இரண்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி , ஆரோக்கியமான வளர்ப்பை குழந்தையின் தாய் உறுதி செய்துள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

போலந்தில் விடுமுறை நாட்களின் போது குழந்தையை இந்தியாவிற்கு அழைத்து வரவும், குழந்தையின் தந்தை நேரடியாகவு, தினசரி இணைய வழியாகப் பேசவும் அனுமதிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | கலைஞர், தளபதி வரிசையில்...சின்னவரா ? சின்னவனா ? - உதயநிதிக்கு சிக்கலாகும் பட்டப்பெயர்கள்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News