புதுடெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று முதல் மலிவாக இருக்கும்.
மத்திய அரசு பண பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை நடத்த ஊக்குவிக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதன்கிழமை முதல் சேவை வரியை ரத்து செய்கிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
#ServiceTax waived for train tickets booked through #IRCTC website till Dec 31. #Demonetisation
— Press Trust of India (@PTI_News) November 22, 2016
இதுவரை இணையதளம் மூலம் ரெயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20-ம், ஏ.சி. வசதி ரெயில் டிக்கெட்டுக்கு ரூ.40-ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது. இனி டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.