மணப்பெண்ணின் தந்தை கொலை... பக்கத்து வீட்டுக்காரர் செய்த சம்பவம் - திருமணத்தில் கொடூரம்!

கேரள மாநிலம் கல்லம்பலம் அருகே திருமணத்திற்கு முன் மணப்பெண்ணின் தந்தை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 28, 2023, 03:08 PM IST
  • அவர்கள் முதலில் வந்து மணப்பெண்ணைத் தாக்கியுள்ளனர்.
  • பாதிக்கப்பட்டவரை மண்வெட்டியால் தலையில் அடித்தனர்.
  • மணமகள் M.Sc பட்டதாரி என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டதாரி கூட இல்லை.
மணப்பெண்ணின் தந்தை கொலை... பக்கத்து வீட்டுக்காரர் செய்த சம்பவம் - திருமணத்தில் கொடூரம்! title=

கேரள மாநிலம் கல்லம்பலம் அருகே 61 வயதான ராஜு, அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜிஷ்ணுவால் கொல்லப்பட்டார். ஜிஷ்ணுவின் குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  ராஜுவின் மகளை பெண் கேட்டு விருப்பம் வீட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், ராஜு அந்த வரணை வேண்டாம் என கூறியுள்ளார். 

சிவகிரியில் காலை 11:10 மணிக்கு ராஜுவின் மகளுக்க திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முன்னரே இந்த கொலை சம்பவம் நடந்துவிட்டது.. நடக்கவிருந்த திருமணத்திற்கான அலங்காரங்கள் அகற்றப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் விழா முடிந்து மணமகளின் குடும்பத்தினரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவரது சகோதரர் ஜிஜின் மற்றும் அவர்களது இரு நண்பர்கள் சேர்ந்து தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது முடிந்து அனைத்து விருந்தினர்களும் வெளியேறினர். 

மேலும் படிக்க | Tomato Price Hike: தக்காளி விலை தாறுமாறாக ஏறியது ஏன்? - இதுதான் காரணமா...!

"அவர்கள் முதலில் வந்து மணப்பெண்ணைத் தாக்கினர், அவரது தாயார் அவர்களைத் தடுக்க முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டார். அப்போதுதான் என் சகோதரர் அவர்களை தடுக்கத் தலையிட்டார், ஆனால் அவர்கள் அவரை கொடூரமாகத் தாக்கி, மண்வெட்டியால் தலையில் அடித்தனர். அருகில் வசிக்கும் எங்கள் உறவினர்களில் ஒருவரின் தலையிலும் அவர்கள் தாக்கினர் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ வந்தனர். அவருக்கு தலையில் ஆறு-ஏழு தையல்கள் உள்ளன," என்று பாதிக்கப்பட்டவரின் உறவினர் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வாகனத்தை நால்வரும் பின்தொடர்ந்ததாகவும், அவர் இறந்துவிட்டதைக் கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார். பின்னர் அவர்கள் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டனர், என்றார்.

குற்றப் பின்னணி கொண்டவர் மற்றும் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் தான் ஜிஷ்ணுவுக்கு பெண் கொடுக்க ராஜு மறுத்துள்ளார். மணமகள் M.Sc பட்டதாரி என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டதாரி கூட இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மற்றொரு உறவினர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர், பெண் கேட்டதை நிராகரித்த பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்தியதாகவும் அவர் கூறினார். 25-30 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தடுப்புக் காவலில் இருப்பதாகவும், அவர்கள் கைது இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் கையில் மண்வெட்டியால் தலையில் அடிக்கப்பட்டு, அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ​​மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க | மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News