புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்த பட்ஜெட் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலை முன்னோக்கி எடுத்து வருகிறது, மேலும் இந்த பட்ஜெட் தாக்கல் வளர்ச்சி பெருக்கி , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிர்கரிக்கும்.
அனைவரையும் திருப்திபடுத்தும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைவரின்தேவைகளை கருத்தில் கொள்ளப்பட்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
விவசாயிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, சாலை கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையை மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது.
விவசாயத்திற்கான ஒதுக்கீடு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு அதிகரிக்கும், துயிமை இந்தியா (சவச் பாரத்) மிஷன் அனைத்து கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொண்டு மேம்படுத்த வேண்டும்.
என்று பிரதமர் மோடி பேசினார்.