Budget 2022 News Live: நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் .
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரின் 2வது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 4 வது பட்ஜெட் ஆகும். இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இளைஞர்கள், பெண்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் பின்வருமாறு:
- 5ஜி அலைகற்றை ஏலம்: 2022-23 நிதியாண்டில் 5ஜி சேவையை வழங்க முடிவு; இதற்கான அலைக்கற்றை ஏலம் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- டிஜிட்டல் கரன்சி: பிட்காயின் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கு மத்திய அரசு அனுமதி. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் மற்றும் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.
- ஆத்ம நிர்பார் திட்டம்: 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்; ஆத்மநிர்பாரின் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பமான KAWACH இன் கீழ் 2000 கி.மீ தூரம் சாலை 2022 - 23 இல் கொண்டு வரப்படும்.
- இ பாஸ்போர்ட்: இ பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது; இதில் உள்ள சிப், சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
- டிஜிட்டல் பல்கலைக்கழகம்: கற்றல் இடைவெளியைக் குறைக்க ஒரு நாடு ஒரே தொலைக்காட்சி திட்டம், மாணவர்களுக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்துதல் என கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- கிசான் ட்ரோன்கள்: விவசாய நிலங்களை கிசான் டிரோன் திட்டம் கொண்டு வரப்படுகிறது. டிரோன் மூலம் நிலங்களை அளப்பது மற்றும் வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற பணிகளுக்கு கிசான் ட்ரோன் திட்டம் பயனளிக்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு.
- பிரதமர் ஆவாஸ் யோஜனா: பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்
- 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை: நாடு முழுவதும் அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
- தொலைபேசி மூலம் கவுன்சிலிங் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்
- பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடி, வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது
- 75 மாவட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவக்க திட்டம்.
- 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- பாதுகாப்புத் துறைக்கு தேவையான 68% தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை. சூரிய சக்தியை ஊக்குவிக்க 19,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பசுமை திட்டங்களை நடைமுறைப் படுத்த பசுமை பத்திரங்கள் மூலம் நிதி திரட்டப்படும்.
- ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். நவீன வீடுகள், பொது போக்குவரத்து மேம்படுத்தப்படும். 80 லட்சம் பேருக்கு இந்த நிதியாண்டில் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படும். நகர்புறங்களில் உள்ள நடுத்தர மக்கள் இதனால் பயன் பெறுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
- தபால் நிலையங்கள் அனைத்தும் வங்கிகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் தபால் நிலைங்களில் ஏ.டி.எம், ஆன்லைன் பரிவர்த்தணை செய்யப்படும். இது ஊரக பகுதி மக்களுக்கு பயன்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு. கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோர் இந்த திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ALSO READ | Budget 2022: ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரட்டிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR