அமைச்சரவை மறுசீரமைப்பு: 9 பேர் சேர்ப்பு, 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து

Last Updated : Sep 3, 2017, 11:30 AM IST
அமைச்சரவை மறுசீரமைப்பு: 9 பேர் சேர்ப்பு, 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து title=

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 

> பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான்.

> மின்சாரத்துறை இணையமைச்சராக இருந்த பியூஸ்கோயல்.

> தமிழகத்தை சேர்ந்த வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.

> பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி 

ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
 
* கேரளாவை சேர்த்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணந்தனம் ஜே. அல்போன்ஸ் அமைச்சராக பதவி ஏற்றார்.

* சத்யா பால் சிங் அவர்கள் அமைச்சராக பதவி ஏற்றார்.

* கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சராக பதவியேற்றார்.

* ஹர்தீப் சிங் பூரி அமைச்சராக பதவி ஏற்றார்.

* ராஜ் குமார் சிங் பதவி ஏற்றார்.

* அனந்தகுமார் ஹெகடே அமைச்சராக பதவி ஏற்றார்.

* விரேந்திர குமார் அமைச்சராக பதவி ஏற்றார்

* அஸ்வினி குமார் சௌபே அமைச்சர் பதவியேற்பார்

* ஷிவ் பிரதாப் சுக்லா பதவி ஏற்றார் 

* மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதவி ஏற்றார்

* நிர்மலா சீதாராமன் கேபினட் பதவிக்கு உயர்த்தப்பட்டார், உறுதிமொழி எடுத்துள்ளார்.

* மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றார்

* தர்மேந்திர பிரதான் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பரிமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Trending News