Disease X: கொரோனாவை விட பயங்கரமான வைரஸ் விரைவில் வருகிறது, எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், விஞ்ஞானிகள் ஒரு புதிய கொடிய வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர். இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்றும் கொரோனாவை விட வேகமாக பரவக்கூடியது என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2021, 07:01 PM IST
  • விஞ்ஞானிகள் ஒரு புதிய கொடிய வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர்.
  • இதற்கு Disease X என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த தொற்றுநோய் பிளாக் டெத்தை விட மோசமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
Disease X: கொரோனாவை விட பயங்கரமான வைரஸ் விரைவில் வருகிறது, எச்சரிக்கும் விஞ்ஞானிகள் title=

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், விஞ்ஞானிகள் ஒரு புதிய கொடிய வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர். இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்றும் கொரோனாவை விட வேகமாக பரவக்கூடியது என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். இதற்கு நோய் எக்ஸ் (Disease X) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நோய் எபோலா வைரஸ் போல ஆபத்தானதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய் தொடர்பான பிரச்சனைகளால் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.

இவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும்

ஹெல்ம்ஹோல்ட்ஸ்-மையத்தின் டாக்டர் ஜோசப் செட்டில் தி சன் ஆன்லைனிடம், 'எந்த வகையான விலங்குகளும் இந்த நோய்க்கு (Disease) ஆதாரமாக இருக்கலாம். எலிகள் மற்றும் வெளவால்கள் போன்ற இனங்கள் அதிகம் உள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த நோயால் அதிக அச்சுறுத்தல்கள் ஏற்படும். இதன் தீவிரம் மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்து மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!

Disease X என்றால் என்ன?

இந்த நோயைப் பற்றி தற்போது எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த அறியப்படாத நோய் அடுத்த பெரிய தொற்றுநோயாக மாறக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒருவர் பற்றி காங்கோவில் (Congo) கண்டறியப்பட்டுள்ளது. காங்கோவில் கண்டறியப்பட்ட நோயாளிக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. மேலும், அவருக்கு உட்புற இரத்தப்போக்கும் இருந்தது. அவருக்கு எபோலா (Ebola) பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு எபோலா வைரஸ் இல்லை என்பது தெரிய வந்தது.

இந்த தொற்றுநோய் இன்னும் ஆபத்தானதாக இருக்கலாம்

இந்த தொற்றுநோய் பிளாக் டெத்தை (Black Death) விட மோசமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். பிளாக் டெத் நோயால் 7.5 கோடி மக்கள் இறந்தனர். ஆனால் Disease X வைரஸ் இதைவிட ஆபத்தானதாக இருக்கும் என கலங்கடிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இது மட்டுமல்லாமல், வரவிருக்கும் காலத்தில், மனிதர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஈகோஹெல்த் அலயன்சின் கூற்றுப்படி, உலகில் தற்போது அறியப்படாத 1.67 மில்லியன் வைரஸ்களில் 827,000 விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்துள்ளன.

வைரஸ் முழு மனித இனத்தையும் அழித்துவிடும்

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் எவ்வாறு முழு மனித இனத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதற்கு கோவிட் -19 ஒரு எடுத்துக்காட்டு. பறவைக் காய்ச்சல், SARS, MERS, நிபா மற்றும் மஞ்சள் காய்ச்சல் அனைத்தும் வைரஸ்களுக்கான பொதுவான எடுத்துக்காட்டுகள். அவை முதலில் விலங்குகளில் தோன்றி பின்னர் மனிதர்களை அடைந்தன.

ALSO READ: COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News