CBSE பருவம் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளிகிறதா? இங்கே சரிபார்க்கவும்!

CBSE 12th Result 2021: நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற டெர்ம்-1 10வது, 12வது தேர்வுகளில் (சிபிஎஸ்இ பருவ 1 10வது, 12வது தேர்வுகள்) 36 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2022, 08:21 AM IST
  • சிபிஎஸ்இ முடிவை எங்கு பார்க்கலாம்
  • முடிவுகளுக்காக 32 லட்ச மாணவர்கள் காத்திருப்பு
  • போர்டு 2-வது டேட் ஷீட்டை விரைவில் வெளியிடலாம்
CBSE பருவம் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளிகிறதா? இங்கே சரிபார்க்கவும்! title=

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு 1 தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர், அவை மார்ச் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது இன்று ஆகும். இதற்கிடையில் சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களால் உறுதிப்படுத்த முடியாது, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார். தேதியை அறிவிப்போம். முன்னதாக, 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ முடிவை எங்கு பார்க்கலாம்?
சிபிஎஸ்இ தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, 10 மற்றும் 12ம் வகுப்பு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். சிபிஎஸ்இ பருவ 1 முடிவுகள் Digilocker செயலி மற்றும் digilocker.gov.in ஆகியவற்றிலும் பார்க்கலாம்.

மேலும் படிக்க | CBSE 2ஆம் பருவத் தேர்வுகள் இந்த தேதியில் தொடங்கும், ஆஃப்லைன் முறையில் நடைபெறும்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் முடிவுகளுக்காக 32 லட்ச மாணவர்கள் காத்திருப்பு
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வது பருவம் 1 முடிவுக்காக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் முடிவு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதிகாரிகளின் சமீபத்திய உரையாடலில், கூடியவிரைவில் சிபிஎஸ்இ முடிவை வெளியிடும் என்று அதிகாரி தெரிவித்துள்ளனர். 

சிபிஎஸ்இ 2வது பருவத் தேர்வுகள் 26 ஏப்ரல் 2022 முதல் நடத்தப்படும். டேர்ம் 1 முடிவுக்குப் பிறகு, போர்டு 2-வது டேட் ஷீட்டை விரைவில் வெளியிடலாம்.

மேலும் படிக்க | Advisory: மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த CBSE! காரணம் இதுதான்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News