8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு!
சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 8 வழி சாலை திட்ட மேலாண்மை இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில், 8 வழி சாலை திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், பயன்கள், மக்கள் தெரிவித்த கருத்துக்களை மத்திய அரசு இன்று அறிக்கையாக தாக்கல் செய்தது.
அப்போது விவசாயிகள் தரப்பில், அனைத்து விவசாயிகளின் மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்றால் வழக்கு எப்படி முன்னோக்கி செல்லும் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அனைத்து விவசாயிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.