நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் முன்பதிவு எண் மாற்றம்; புதிய எண்ணை வெளியிட்ட Indane Gas

இண்டேன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்துள்ள அவர்களின் மொபைல் எண்ணுக்கு புதிய முன்பதிவு எண்ணை SMS அனுப்பியுள்ளது. இனி இந்த எண் மூலம் நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 30, 2020, 03:39 PM IST
  • ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்ய நான்கு வழிகள் உள்ளன.
  • 7718955555 என்ற எண் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம்.
  • உங்கள் வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
  • நவம்பர் 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் OTP முறை.
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் முன்பதிவு எண் மாற்றம்; புதிய எண்ணை வெளியிட்ட Indane Gas

Indane Released New LPG Cylinder Booking Number: எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தினால், உங்களுக்கான ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீங்கள் ஒரு இண்டேன் கேஸ் (Indane Gas) வாடிக்கையாளராக இருந்தால், இனிமேல், பழைய எண்ணில் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது. இண்டேன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்துள்ள அவர்களின் மொபைல் எண்ணுக்கு புதிய முன்பதிவு எண்ணை SMS அனுப்பியுள்ளது. இனி இந்த எண் மூலம் நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்ய நான்கு வழிகள் உள்ளன.

முதலாவது விநியோகஸ்தரை நேரில் சந்தித்து வாங்கலாம். இரண்டாவது தங்கள் மொபைல் எண்ணிலிருந்து புக் செய்யலாம். மூன்றாவது ஆன்-லைன் மூலமும், நான்காவது நிறுவனம் வழங்கிய வாட்ஸ்அப் எண் (WhatsApp Number) மூலம் முன்பதிவு செய்யலாம். இதில் உங்கள் எண்ணிலிருந்து நிறுவனம் கொடுத்த எண்ணை அழைப்பதே எளிதான வழி. 

ALSO READ | இந்த முறையில் LPG சிலிண்டர் முன்பதிவு செய்தால் ₹.50 கேஷ்பேக் கிடைக்கும்..!

நீங்கள் இண்டேன் வாடிக்கையாளராக இருந்தால், புதிய எண்ணான 7718955555 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம் அல்லது மற்றொரு சுலபமான வழி வாட்ஸ்அப். உங்கள் வாட்ஸ்அப் மெசஞ்சரில் REFILL என தட்டச்சு செய்து 7588888824 க்கு அனுப்பவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மட்டுமே வாட்ஸ்அப் எண்ணில் முன்பதிவு செய்யப்படும். 

கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மானியம் குறைக்கப்படுகிறது:
நவம்பர் 1 ஆம் தேதி உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் (LPG Cylinders) விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். கடந்த ஒரு வருடத்தில் எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை தொடர்ந்து குறைப்பதன் காரணமாக, மானிய விலையில் சிலிண்டர் ரூ .100 ஆக விலை உயர்ந்தது. இப்போது மானியம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. 

ALSO READ | LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்... நாம் தெரிந்து கொள்ள வேண்டியது..!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய தலைநகரான டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் சந்தை விலை, அதாவது மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ .637 ஆக இருந்தது. இது இப்போது ரூ .594 ஆக குறைந்துள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation) தனது இணையதளத்தில் மானிய விலையில் சிலிண்டர்களின் விலை குறித்த தகவல்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது. ஒரு வருடம் முன்பு வரை, அவரது இணையதளத்தில் தகவல் கிடைத்தது.

எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் OTP முறை:
எல்பிஜி சிலிண்டர் ஹோம் டெலிவரி (LPG Cylinder Home Delivery) இப்போது ஒன் டைம் கடவுச்சொல் (OTP) அடிப்படையில் இருக்கும். எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்குப் பிறகு, வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP எண்ணை சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் பகிரப்பட வேண்டும். அந்த குறியீடு எண் கணினியுடன் பொருந்தினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். ஒரு வேலை உங்களிடம் OTP இல்லையென்றால், டெலிவரி ஊழியர் உங்களுக்கு சிலிண்டர் வழங்காமல் திரும்பி செல்ல முடியும்.

ALSO READ |  LPG மானியம் வங்கி கணக்கில் ஏறுகிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News