விவசாயம் செய்யும் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 2 மொபைல் APP

மத்திய வேளாண் அமைச்சகம் விவசாயிகளை விவசாயம் செய்ய தேவையான அனைத்தும் எளிதாக கிடைப்பதற்காக இரண்டு பயன்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 24, 2019, 03:26 PM IST
விவசாயம் செய்யும் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 2 மொபைல் APP
File photo

புதுடெல்லி: விவசாயிகளின் வேலையை எளிதாக்கும் வகையில் ஆண்ட்ராய்டு மொபைலில் மத்திய வேளாண் அமைச்சகம் இரண்டு ஆப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆப் மூலம் விவசாயத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களை வாங்கவும் முடியும், இதே ஆப் மூலம் விற்பனை செய்யவும் முடியும். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்த மொபைல் ஆப்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் பயன்பாட்டை வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். இந்த பயன்பாட்டில் சி.எச்.சி (CHC) பண்ணை சாதனம் என்ற ஆப், மற்றொன்று கிருஷி கிசான் (Krishi Kisan) ஆப் ஆகும். 

சி.எச்.சி பண்ணை இயந்திரம் என்ற முதல் ஆப்ஸ் என்பது, விவசாயிகள் இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கலாம் மற்றும் விற்கலாம். இவற்றையும் வாடகைக்கு விடலாம். இதில் விவசாயம் செய்ய தேவையான இயந்திர கருவிகளை வழங்கும் சுமார் 40,000 மையங்கள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் 1 லட்சம் 21 ஆயிரம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பயன்பாடு மூலம் பரிவர்த்தனைகள் ஏற்பட்டால், மதிப்பீட்டின் அடிப்படையில் விவசாயிகள் கருத்து தெரிவிப்பார்கள். இந்த 40,000 மையங்களில் மட்டும் விவசாயிகள் பரிவர்த்தனை செய்யா வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அவர்களே தங்களுக்குள் வாங்கவும், விற்கவும், வாடகைக்கு மற்றும் பரிமாற்றம் செய்யவும் முடியும்.

அதே போல கிருஷி கிசான் என்ற இரண்டாவது பயன்பாடானது என்பது, இதன் மூலம் விவசாயிகள் நல்ல விதைகளையும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் துறைகளின் இருப்பிடத்தை விவசாயிகளால் காண முடியும். இந்த பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் நன்றாக விளையும் விதைகளை குறித்து நுட்பங்களையும் பெறலாம். உயர் தரமான பயிர்களைக் கொண்ட விவசாயி தனது சிறந்த சாகுபடி முறைகளை மற்ற விவசாயிகளுக்கு நிரூபிக்க முடியும். இதனால் இந்த விவசாயிகளின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் பயிரின் புவி-குறியிடுதல் மற்றும் புவி-வேலி அமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்பு செய்தியை வழங்கவும் இந்த பயன்பாடு உதவும்.

நாட்டின் 4 மாவட்டங்களில் குஜராத்தில் ராஜ்கோட், மகாராஷ்டிராவில் நாந்தேடு, மத்திய பிரதேசத்தில் போபால், மற்றும் உத்தரபிரதேசத்தில் பனாரஸ் போன்ற மாவட்டங்களில் இந்த மொபைல் ஆப்ஸ் மூலம் நடத்தப்பட்ட முடிவுகளை காணலாம்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கூறிகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அகற்றுவதற்காக இந்த பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பயன்பாடுகளின் காரணமாக, சிறு மற்றும் பெரிய விவசாயிகள் இருவரும் தங்கள் உபகரண இயந்திரங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். புதிய விதைகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்த துல்லியமான தகவல்களை விவசாயிகள் தொடர்ந்து பெறுவார்கள் எனக் கூறினார்.

இந்த பயன்பாடுகளை (APP) Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.