சத்தீஸ்கர் மாநிலம் உள்பட, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், இம்மாதத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கு காலை 7 முதல் 3 மணி வரையும், எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மதியம் 1 மணி வரை 25.15 சதவீத வாக்குகள் பதிவாகின. மதியத்திற்கு பிறகு வாக்கு சதவீதம் திடீரென அதிகரித்தது, நண்பகல் 3.00 மணி 47.18% வாக்குகள் பதிவாகின.
மாலை 4.30 மணி வரை 56.58% வாக்குகள் பதிவாகின. அதில் கொண்டகாவ்வில் 61.47% கேச்கலில் 63.51%, கங்கரில் 62%, பஸ்தரில் 58%, தண்டேவாடாவில் 49%, கெய்ராஹாரில் 60.5%, டோங்கார்காரில் 64%, குஜ்ஜியில் 65.5% என வாக்குகள் பதிவாகி உள்ளனர்.
56.58% voter turnout recorded till 4.30 pm in the first phase of #ChhattisgarhAssemblyElections2018 including 61.47% in Kondagaon; 63.51% in Keshkal; 62% in Kanker; 58% in Bastar; 49% in Dantewada; 60.5% in Khairagarh; 64% in Dongargarh; 65.5% in Khujji. pic.twitter.com/NFm2aIAEcR
— ANI (@ANI) November 12, 2018
காலை 7 மணிக்கு தொடங்கிய 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குபதிவு நண்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. தற்போது மீதமுள்ள எட்டு தொகுதிகளுக்கான வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுவு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 1,101 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.