தொடரும் குழந்தைகள் பலி: மருத்துவர்களின் அலட்சிம் காரணமா?

Last Updated : Aug 19, 2017, 11:48 AM IST
தொடரும் குழந்தைகள் பலி: மருத்துவர்களின் அலட்சிம் காரணமா? title=

கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததை அடுத்து. இன்று (சனிக்கிழமை) டெல்லி தேசிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் இளங்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இது குறித்து குடும்பத்தார் கூறுகையில், அக்குழந்தை திங்களன்று ராவ் துலா ராம் மருத்துவமனையில் பிறந்துள்ளது. திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஆக்ஸிஜனை வழங்க மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளார், ஆனால் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் அலட்சியமே குழந்தை இறந்ததிற்கு காரணம் குடும்பத்தார் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மருத்துவமனை மரணத்தின் காரணம் சுவாச பிரச்சினைகள் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News