புதுடெல்லி: பல போலி நிறுவனங்களின் பெயர்களில் சில சீன நிறுவனங்களும் (Chinese Entities) அவர்களது இந்திய கூட்டாளிகளும் பண மோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் என்ற நம்பகமான தகவல் கிடைத்ததையடுத்து, வருமான வரித் துறை (Income Tax Department) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) சீன நிறுவனங்களின் வளாகங்களில் சொதனை நடத்தியதாக ஒரு CBDT அறிக்கை தெரிவிக்கின்றது.
சீன நிறுவனங்கள், அவற்றின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் டெல்லி, குருகிராம் மற்றும் காசியாபாத்தில் உள்ள இரண்டு வங்கி ஊழியர்கள் என பல்வேறு வளாகங்களில் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CBDT தெரிவித்துள்ளது.
சீன நபர்களின் உத்தரவின் பேரில், பல்வேறு போலி நிறுவனங்களில் 40 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான வரவுகளை இவை பெற்றுள்ளன என்று இந்த சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ரீடெயில் ஷோரூம்களின் வணிகங்களைத் தொடங்க சீன நிறுவனத்தின் துணை நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய சிறு நிறுவனங்களும், போலி நிறுவனங்களிடமிருந்து (Shell Entities) 100 கோடி ரூபாய்க்கும் மேலான போலி அட்வான்ஸ் தொகையைப் பெற்றுள்ளன.
ALSO READ: எல்லை மீறும் சீனாவின் பேராசை... தஜகிஸ்தான் தலையிலும் கை வைக்கிறது ..!!!
மேலும், ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் பண மோசடி (Money Laundering) தொடர்பான ஆவணங்களும், இவற்றில் வங்கி ஊழியர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோருக்கு உள்ள தொடர்புகளும் இந்த சோதனை நடவடிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளன என்று CBDT தெரிவித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஹவாலா பரிவர்த்தனைகளின் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
ALSO READ: சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்... அதிர்ச்சி தகவல்...!!!